Advertisment

வேலைக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்; ஊழியர்களுக்கு J&K அரசு எச்சரிக்கை

After attacks, J&K to migrant staff: get to work or face action: தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் வேலைக்குச் செல்ல தயங்கும் ஊழியர்கள்; நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
வேலைக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்; ஊழியர்களுக்கு J&K அரசு எச்சரிக்கை

காஷ்மீரின் டிவிஷனல் கமிஷனர் சனிக்கிழமை காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களின் துணை கமிஷனர்களுக்கு புலம்பெயர்ந்த அரசு ஊழியர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறத் தேவையில்லை என்பதையும், "பணியில் இல்லாதவர்கள் மீது சேவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதையும் உறுதிப்படுத்த உத்தரவிட்டார்.

Advertisment

பெயர் வெளியிட விரும்பாத சில துணை ஆணையர்கள், செயல்படுவதற்கு முன் அரசு உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறினாலும், கடந்த வாரம் ஒரு சீக்கிய பள்ளி முதல்வர் மற்றும் காஷ்மீர் இந்து ஆசிரியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறிய ஊழியர்கள் காஷ்மீரில் பணியாற்றவது பாதுகாப்பற்றதாக உணர்கின்றனர் என்று கூறினர். மேலும், நிர்வாகம் "உணர்ச்சியற்றதாக" உள்ளது என்றும் கூறினர்.

ஜம்முவிற்கு திரும்பியவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் வேலைக்குச் செல்வதில் இன்னும் கவனமாக இருக்கிறார்கள், சிலர் இப்போதைக்குத் திரும்பி செல்வதைப் பற்றி முடிவு செய்யவில்லை. சித்தார்த் ரெய்னா (பெயர் மாற்றப்பட்டது), பிரதமரின் தொகுப்பின் கீழ் ஜே & கே கல்வித் துறையில் 2015 ல் ஸ்ரீநகரில் வேலை பார்த்து வந்தவர், கடந்த வாரம் ஜம்மு திரும்பியுள்ளார். ரெய்னா கூறுகையில், திரும்பியுள்ளவர்களில் பெரும்பாலோர் ஆசிரியர்கள். இப்போது அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்துகிறார்கள் என்று கூறினார்.

"உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அஞ்சி ஊழியர்கள் ஜம்முவுக்கு வந்தனர். அவர்களின் அச்சத்தைப் போக்கி, பாதுகாப்பை உறுதி செய்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, சேவை விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் அவர்களை அச்சுறுத்துகிறது, ”என்று பிரதமரின் தொகுப்பின் கீழ் வேலைக்குச் சென்றபின், 2015 இல் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறிய ஒரு ஊழியர் கூறினார்.

"நல்ல நோக்கத்துடன் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஊழியர்கள் பலர் தெற்கு காஷ்மீரில் உள்ள இடங்களில் தாங்களாகவே வாடகை விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ”பிரதமர் தொகுப்பின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற மற்றொரு சிறுபான்மை உறுப்பினர் பெயர் வெளியிட விரும்பாத நிலையில் கூறினார்.

காஷ்மீர் டிவிஷனல் கமிஷனர் பாண்டுரங் போலே, தலைமையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு மாவட்டங்களின் அனைத்து டிசி மற்றும் எஸ்பிக்களுடன் கலந்துரையாடப்பட்ட பல பிரச்சனைகளில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்தல் மற்றும் "பாதுகாக்கப்பட்ட நபர்களுக்கான" அரசு தங்குமிடத்தை அடையாளம் காணதலும் ஒன்று.

அக்டோபர் 5 முதல் 14 ஸ்ரீநகர் ஹோட்டல்களில் டிவிஷனல் கமிஷனர் அலுவலகம் வழங்கப்பட்ட மூலம் "பாதுகாக்கப்பட்ட நபர்களுக்கான" இடவசதி "அகற்றியதாகக் கருதப்படும்" என்று டிசி, கூட்டத்தில் இருந்தவர்களிடம் கூறினார்.

மேலும், பொதுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் போன்ற "பாதுகாக்கப்பட்ட நபர்கள்", சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் தங்குமிடம் ஆகியவற்றை வழங்குவதற்கான வழிமுறைகளில், "கடிதத்திற்கு இணங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டது.

publive-image

"அனைத்து துணை கமிஷனர்கள் மற்றும் எஸ்எஸ்பிக்கள் (மூத்த காவல் கண்காணிப்பாளர்) அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது தலைவர்களுடன் 2-3 நாட்களுக்குள் அவர்களின் பாதுகாப்பு, தங்குமிடம் போன்ற அச்சங்களை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் அவர்களின் உண்மையான கோரிக்கைகளை கருத்தில் கொள்ளவும் நேரடி சந்திப்பை உறுதி செய்ய வேண்டும் என்று டிவிஷனல் கமிஷ்னர் உத்தரவிட்டார். ”என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட கூட்டத்தின் செய்திகள் தெரிவித்தன.

மாவட்டங்களில் புலம்பெயர்ந்தோர் அல்லாத சிறுபான்மை மக்கள்-தொழிலாளர்கள், திறமையான தொழிலாளர்கள் போன்றவர்கள்-அடையாளம் காணப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு வழக்கமான தொடர்புகளுடன் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் டிவிஷனல் கமிஷ்னர் உத்தரவிட்டார். மேலும், புலம்பெயர்ந்த ஊழியர்களை, தொலைதூர மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்குப் பதிலாக, பாதுகாப்பான மண்டலங்களில் தற்காலிகமாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment