இந்திய பயணத்தால் மவுசு இழக்கும் ஜஸ்டின் ட்ருதியே!

ஜஸ்டின் ட்ருதியேவின் அண்மையில் இந்திய பயணம் இருநாட்டு உறவில் பாதக சூழலை அதிகரித்துள்ளது

சந்திரன் ஆர்

அண்மையில் தனது குடும்பத்துடன், 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே இப் பயணத்தினால், கனடா மக்களிடையே இருந்த நெருக்கத்தையும், விருப்பதையும் இழந்திருக்கிறார் என புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்போது அந்நாட்டில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டால் ஜஸ்டின் ட்ருதியேவின் லிபரல் கட்சி, எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிடம் தோற்றுவிடும் எனச் சொல்லப்படுகிறது. கனடாவின் நெட்வொர்க் குளோபல் நியூஸூக்கு, இப்ஸாஸ் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

ஜஸ்டின் ட்ருதியேவின் அண்மையில் இந்திய பயணம் இருநாட்டு உறவில் பாதக சூழலை அதிகரித்துள்ளதாக 40 சதவீத கனடா நாட்டினர் கருதுவதாகவும், 16 சதவீத மக்கள் இது முன்னேறத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அதேபோல, அந்நாட்டைச் சேர்த்த வாக்களிக்கும் வயதை எட்டிய 1001 குடிமக்களிடம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 54 சதவீத்தின்ர், ஜஸ்டின் ட்ருதியேவின் ஆட்சி குறித்து எதிர்மறை கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வே பிப்ரவரி 28 முதல் மார்ச் 1ம் தேதிக்குள் நடத்தப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close