Advertisment

டெல்லி ரகசியம்: யோகா ஆன் தி வே… மத்திய அமைச்சர்களுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட்

திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு அமைச்சகமும் அதன் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் யோகா அமர்வுகளை நடத்த வேண்டும்

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்: யோகா ஆன் தி வே… மத்திய அமைச்சர்களுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட்

ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் வரவுள்ள நிலையில், ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கான கவுன்டவுனைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அமைச்சகமும் அதன் துறை ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் யோகா அமர்வு நடத்திட வேண்டும்.

Advertisment

சுற்றுசூழல் மற்றும் தொழிலாளர் ஆகிய இரண்டு அமைச்சகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைச்சர் பூபேந்தர் யாதவ், வழக்கமான அலுவலகப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் இரண்டு தனித்தனி நாட்களில் தனது ஊழியர்களுடன் சேர்ந்து யோகா செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று ஜோர்பாக்கில் இந்திரா பிரயாவரன் பவனில் உள்ள அமைச்சக தலைமையகத்தில் 200 சுற்றுச்சூழல் அமைச்சக துறை அதிகாரிகளுடன் யாதவ் யோகாவில் ஈடுபட்டார். அந்நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் இருந்து வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இன்று, தொழிலாளர் அமைச்சக ஊழியர்களுக்கான யோகா அமர்வில் யாதவ் கலந்துகொள்கிறார்.

இறந்தும் மக்கள் மனதில்

கடந்தாண்டு மே 6ஆம் தேதி கொரோனாவால் இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் நினைவாக RLD வெள்ளிக்கிழமை பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது

டெல்லியின் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சிங்கின் மகனும் RLD தலைவருமான ஜெயந்த் சவுத்ரி தொகுத்து வழங்கிய முக்கிய நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்பி சஞ்சீவ் பல்யான், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா, மூத்த தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுதவிர, மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் மற்றும் BKU தலைவர் நரேஷ் டிகாயிட், RLD இன் கோட்டையான மேற்கு உ.பி.யில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

சிறிது காலம் காத்திருப்பு

மத்திய அரசின் புதிய முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் அஜய் சூட், தற்போது டெல்லி அலுவலகத்தில் பணியை தொடங்கியுள்ளார். அவர் பெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தில், இயற்பியல் துறையின் பேராசிரியராக இருந்தார். திடீரென நியமிக்கப்பட்டதால், மீதமுள்ள பணிகளை முடித்திட பெங்களூரில் வசித்து வந்தார். சூட் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பல விரிவுரைகளுக்கு ஏற்கனவே கமிட் ஆகியிருந்ததால், ஆலோசகர் பணியில் சேர கால தாமதமானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

International Yoga Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment