Advertisment

இது போன்ற சூழலில் இப்படித்தான் பொறுப்பே இல்லாம நடந்துக்குவீங்களா - எரிச்சலான அகமதாபாத் ஏர்போர்ட்

அபிமன்யு தன்னுடைய ட்வீட்டினை டெலிட் செய்துவிட்டதோடு, நீங்கள் ஏதோ கண் பரிசோதனை தான் செய்கின்றீர்கள் என்று நினைத்தேன் என்றும் கூறியிருக்கிறார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ahmedabad Airport teaches lesson to flyer Abhimanyu Acharya

Ahmedabad Airport teaches lesson to flyer Abhimanyu Acharya

Ahmedabad Airport teaches lesson to flyer Abhimanyu Acharya : உலகின் பல்வேறு இடங்களிலும் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் உலக நாடுகளோடு சேர்ந்து செய்துவருகிறது. ஆனால் இவர்களின் நடவடிக்கைகளை துச்சமென நினைத்து ஆங்காங்கே, இந்தியாவில் அது இல்லை, இது இல்லை என்று குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisment

மேலும் படிக்க : ஆதரவற்றவர்களுக்கு உணவு… உள்ளூர்காரர்களுக்கு காய்கறிகள் – மனித நேயம் போற்றிய கரூர் மக்கள்

அது ஒரு பக்கம் இருக்க, செய்கின்ற பணிகளை பாராட்டவிடினும், பொய்யான தகவல்களை பதிவு செய்து மேலும் பல இன்னல்களை இது போன்ற சூழலில் உருவாக்கிவிடுகின்றனர். 21ஆம் தேதி அமெரிக்காவின் டொரொண்ட்டோவில் இருந்து இந்தியா வந்தடைந்தார் அபிமன்யு என்ற இளைஞர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை இந்தியா மிகப்பெரிய இழப்பை சந்திக்க உள்ளது என்று ட்வீட் செய்திருந்தார்.

Ahmedabad Airport teaches lesson to flyer Abhimanyu Acharya

இந்த ட்வீட்டினை பார்த்து மனம் நொந்த அகமதாபாத் விமான நிலைய நிர்வாகம், அபிமன்யூவுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவினை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருக்கிறது.

இந்த ட்வீட்டினை பார்த்ததும் அபிமன்யு தன்னுடைய ட்வீட்டினை டெலிட் செய்துவிட்டதோடு, நீங்கள் ஏதோ கண் பரிசோதனை தான் செய்கின்றீர்கள் என்று நினைத்தேன் என்றும் மற்றொரு ட்வீட்டில் கூறியிருக்கிறார்.

பொறுப்பான குடிமகனாக நடந்து கொள்ளுங்கள் - விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள்

மேலும், விமான நிலைய ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையையே பணயம் வைத்து இந்த சமூகத்திற்காக உதவிக் கொண்டிருக்கின்றார்கள். உங்களின் புகார் தவறானது மேலும் அது எங்களை காயமடைய வைத்துள்ளது. நீங்கள் EY288 என்ற விமானத்தில் இருந்து காலை 02 மணி 44 நிமிடங்களுக்கு தரையிறங்கியுள்ளீர்கள். உங்களுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் 02:48 மணி அளவில் எடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் இந்த சமூகத்தில் அச்சத்தை பரப்பாதீர்கள். பொறுப்புடைய குடிமகனாக நடந்து கொள்ளுங்கள் என்றும் ட்வீட் செய்துள்ளது.

Ahmedabad Airport teaches lesson to flyer Abhimanyu Acharya

தன்னுடைய ட்வீட்களை அழித்த கையோடு, ட்விட்டர் பக்கத்தையும் காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார் மிஸ்டர் அபிமன்யூ.  அவர் மீது தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பான நேரத்துல, ரொம்ப பொறுப்பா நடந்துக்கனும் மக்களே.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Corona Ahmedabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment