விமானப்படை அதிகாரியை சிக்க வைத்த செக்ஸ் சாட்!

கால நேரம் இல்லாமல் வாட்ஸ் அப்பில் பேசி வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் அருண் வார்வாவிடம் அந்தரங்க விஷயங்களை பேசியுள்ளனர்

இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை, பயங்கரவாதிகளிடம் கொடுத்த கேப்டன் அருண் மார்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய விமானப்படையின் தலைமை அலுவலகத்தில் தலைமை கேப்டனாக பணிபுரிந்து வருபவர் அருண் மார்வா (51). இவருடைய ஃபேஸ்புக் மெசஞ்சரில் இரண்டு மாடல் பெண்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர்கள் அவருடன் தொடர்ந்து நட்பை வளர்த்து வந்துள்ளனர். பின்னர் வாட்ஸ் அப் எண்களை பறிமாறிக் கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் கால நேரம் இல்லாமல் வாட்ஸ் அப்பில் பேசி வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் அருண் வார்வாவிடம் அந்தரங்க விஷயங்களை பேசியுள்ளனர். இவரும் அவர்களுடன் தனித்தனியாக செக்ஸ் சாட் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்களில் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்கள் விமானப்படையில் நீங்கள் வேலை பார்ப்பது எங்களுக்குத் தெரியும். அங்குள்ள ரகசிய தகவல்களை எங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும். அனுப்பாவிட்டால், நீங்கள் பேசிய செக்ஸ் விஷயங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவரிடம் இருந்த சில முக்கிய தகவல்களை கொடுத்தார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வேறு சில தகவல்களை கேட்டுள்ளனர்.

இந்நிலையில் வியாழனன்று அவர் விமானப்படை அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது ஸ்மார்ட் போனை ரகசியமாக எடுத்துச் சென்றுள்ளார். இதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். இதையடுத்து, அவரை கைது செய்து போனை கைப்பற்றினர். அப்போது அவர் முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியது தெரிய வந்தது.

விமானப்படை கேப்டனுடன் தொடர்பில் இருந்தவர்கள் மாடல் அழகிகள்தானா? அல்லது வெளிநாட்டு உளவாளிகளா? அல்லது ஐஎஸ் பயங்கரவாதிகளா? என்பதை விசாரித்து வருகிறார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close