Advertisment

ஏர் இந்தியாவின் கலைப் பொருட்கள் அரசிடம் தான் உள்ளது; விமான நிறுவனம் மட்டுமே டாட்டாவுக்கு சொந்தம்

தி மகாராஜா கலெக்‌ஷன் என்று வழங்கப்படும் அந்த கலைத் தொகுப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் உள்ளன. ஜத்தின் தாஸ், அஞோலி எலா மேனோன், எம்.எஃப். ஹூசைன், மற்றும் வி.எஸ். கைதொண்டே போன்ற படைப்பாளர்களின் ஓவியங்களும் அதில் உள்ளது.

author-image
WebDesk
New Update
Air India art collections, today news, tamil news, tamil nadu news, news in tamil

Divya A

Advertisment

Air India art collection : ஏர் இந்தியா நிறுவனம் அதன் உண்மையான உரிமையாளர்களான டாட்டாவிடம் சென்றுவிட்டாலும், ஜே.ஆர்.டி. டாட்டாவால் உருவாக்கப்பட்ட கலைத் தொகுப்பு இன்னும் அரசாங்கத்திடம் டான் உள்ளது. அரசு மற்றும் டாட்டா நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தம் ஏர்லைன்ஸ் விற்பனைக்கானது மட்டுமே. ஏர் இந்தியாவின் நிலம், கட்டிடங்கள் மற்றும் இதர சொத்துகள் அரசிடம் மட்டுமே உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலாச்சார அமைச்சக வட்டாரங்கள், முறையாக அதனை ஒப்படைத்தல் மற்றும் அதனை தொடர்ந்து டெல்லியில் அந்த கலைப் பொருட்களை காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.

ஏர் இந்தியாவின் நாரிமன் பாய்ண்ட் கட்டிடம் விற்பனைக்கு முன்மொழியப்பட்ட பிறகு 2018ம் ஆண்டு ஜூலை மாதம் கலைப் பொருட்கள் மீது கவனம் திரும்பியது. தி மகாராஜா கலெக்‌ஷன் என்று வழங்கப்படும் அந்த கலைத் தொகுப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் உள்ளன. ஜத்தின் தாஸ், அஞோலி எலா மேனோன், எம்.எஃப். ஹூசைன், மற்றும் வி.எஸ். கைதொண்டே போன்ற படைப்பாளர்களின் ஓவியங்களும் அதில் உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கும் கலாச்சார அமைச்சகத்துக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் படி, இந்த சேகரிப்பு எந்தவித பணப் பரிசீலனையும் இன்றி டெல்லியில் வைக்கப்பட்டுள்ள தேசிய நவீன கலைக் களஞ்சியத்தில் (National Gallery of Modern Art (NGMA)) ஒப்படைக்கப்பட வேண்டும். இது அரசின் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு கைமாற்றப்படும் பணி மட்டுமே.

ஏர் இந்தியா விமானம் நஷ்டமடைய துவங்கிய பிறகு, பல ஆண்டுகளாக அந்த கலைப் பொருட்கள் அனைத்தும் பேக் செய்யப்பட்டு நாரிமன் பாய்ண்ட் கட்டிடத்தின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்பட்டிருக்கும் கலைப் படைப்புகளில் சில காலப்போக்கில் காணாமல் போயுள்ளது. திருடப்பட்டுள்ளது. மேலும் சில கலைப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. உண்மையில் இந்த விலைமதிப்பற்ற சேகரிப்பைப் பாதுகாக்க முடியாமல் போனதற்காக தேசிய கேரியரின் நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. 1991ம் ஆண்டு ஜத்தின் தாஸ் வரைந்த பறக்கும் அப்ஸரா ஓவியத்தை ஏர் இந்தியா காட்சிக்கு வைத்திருந்தது. ஆனால் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த ஓவியம் சந்தையில் ரூ. 25 லட்சத்திற்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். முன்னாள் ஏர் இந்தியா நிர்வாகி மீது விசாரணைகள் குற்றம் சாட்டப்பட்டன, மேலும் அரசு சொத்தை திருடியதாக அவர் மீது புகார் தொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இது போன்ற கலைப் பொருட்களை இந்திய அதிகாரிகள் வைத்திருக்கின்றார்களா என்பதை விமான நிலையம் விசாரித்து வருவதாக தகவல்கள் வழங்கப்பட்டன.

கலாச்சார அமைச்சகம் 2017 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையே மும்பைக்கு பல பயணங்களை மேற்கொண்டு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு கலைப்படைப்புகள் டெல்லிக்கு அனுப்பப்படுவதற்கு முன் கலைப் பொருட்களின் உண்மை தன்மையை அறிவதற்கான சிக்கல்களால் தாமதம் ஆனது. நாங்கள் அந்த கலைப்பொருட்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொண்டோம். இந்த கலைப்பொருட்களின் தொகுப்பு மிகப்பெரியது. மேலும் விலையுயர்ந்தது என்பதால் இதற்கு அதிக நேரமானது என்று அப்போது பயணங்கள் மேற்கொண்ட அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இப்போது விமான நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால், கலைப்படைப்புகளை விரைவாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை புதுப்பிக்க கலாச்சார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Air India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment