Advertisment

பேச்சு வார்த்தை மூலமே தீவிரவாதத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும் - சீனா கருத்து

India Surgical Strike 2.0 : இந்த பிராந்தியத்தில் அமைந்திருக்கும் இதர நாடுகள், இவ்விரு நாடுகளின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை காக்கவே விரும்புகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Air strike on Balakot

Air strike on Balakot

Air strike on Balakot : இன்று காலை 12 மிரேஜ் 2000 வகை விமானங்கள், இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான நிலையில், பாகிஸ்தான் நாடும் தங்களின் நிலைப்பாட்டினை கூறியுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : மிரேஜ் 2000 ரக போர் விமானம் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

Air strike on Balakot - சீனாவின் கருத்து

பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் பகுதியில் துணை ராணுவப் படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்ற நாளில் இருந்தே இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

இதற்கு பதில் தாக்குதல் அளிக்கும் வகையில், தற்போது தங்களின் எதிர்தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சீனா தற்போது தங்களின் கருத்தினை கூறியுள்ளது.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங்க் ”இந்தியாவும் பாகிஸ்தானும் தெற்காசிய நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளாகும்.

இந்த பிராந்தியத்தில் அமைந்திருக்கும் இதர நாடுகள், இவ்விரு நாடுகளின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை காக்கவே விரும்புகின்றன. இச்சமயத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதலில் இவ்விரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சீனா தங்களின் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : 1971ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் விமானப்படை தாக்குதல்

India China Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment