Advertisment

ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் சந்திப்பு.. பாதுகாப்பு குறித்து ஆலோசனை

சந்திப்பின் போது, இரு நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்களுக்கு இடையிலான உரையாடலைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajit Doval

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிகாரி நிகோலாய் பட்ருஷேவை புதன்கிழமை மாஸ்கோவில் சந்தித்தார். (source: Twitter/@RusEmbIndia)

இந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, முதல்முறையாக மாஸ்கோவுக்கு சென்ற, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதன்கிழமை தனது ரஷ்ய பிரதிநிதி நிகோலாய் பட்ருஷேவை சந்தித்தார். இந்த சந்திப்பில் "பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் பரந்த அளவிலான பிரச்சினைகள்" பற்றி விவாதிக்கப்பட்டது என்று மாஸ்கோ வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisment

இரு நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை தொடர இரு தரப்பும் முடிவு செய்ததுடன், இருதரப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைமை குறித்தும் விவாதித்தனர்.

பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் பரந்த அளவிலான பிரச்சினைகள், பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வில் உள்ள மேலோட்டமான சிக்கல்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன.  ரஷ்ய-இந்திய சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையின் முற்போக்கான வளர்ச்சியை வலியுறுத்தி, இரு நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்களுக்கு இடையிலான உரையாடலைத் தொடர இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இதற்கிடையில், தாய்லாந்தில், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்காவும் வேறு சில நாடுகளும் இந்தியா’ ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவதைப் பாராட்டாமல் இருக்கலாம், ஆனால் புதுடெல்லி தனது நிலைப்பாட்டை பின் வாங்காததால் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதாக கூறினார்.

ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களுக்கு, அதிக எரிசக்தி விலைகளின் தாக்கத்தைத் தணிக்க முயற்சிக்கும் சூழ்நிலை இன்று உள்ளது. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆனால் இந்தியா அதை ஒரு "தற்காப்பு வழியில்" செய்யவில்லை. நாங்கள் எங்கள் நலன்களைப் பற்றி மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கிறோம் என்று ஜெய்சங்கர் பாங்காக்கில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.

எங்கள் நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 2000 ஆக உள்ளது, இவர்கள் அதிக விலை கொடுத்து எரிசக்தி வாங்கக்கூடியவர்கள் அல்ல. இந்தியாவில் உள்ள மக்களுக்கு "சிறந்த டீல்" கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் "தார்மீக கடமை" என்று ஜெய்சங்கர் கூறினார்.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து கேட்டதற்கு, அமெரிக்காவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுக்கு- எங்கள் நிலை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். நீங்கள் மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள், ”என்று அவர் கூறினார்.

பிற நாடுகள் எப்போதும் அதைப் பாராட்ட மாட்டார்கள், ஆனால் அதை உலகம் ஓரளவுக்கு உண்மையாக ஏற்றுக்கொள்கிறது என்பதே எனது உணர்வு,” என்றார் ஜெய்சங்கர்.

இதற்கிடையில், ஒரு ஊடக சந்திப்பில், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கும் போது, ​​அந்த எண்ணெயில் "உக்ரேனிய இரத்தத்தின்" ஒரு பகுதி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்தியாவிடம் இருந்து அதிக ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 3 கமாண்டோக்களை சிஐஎஸ்எஃப் பணிநீக்கம் செய்தது

புதுடெல்லி: இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய டெல்லியில் உள்ள குடியிருப்பு வளாகத்திற்குள் கார் ஒன்று வலுக்கட்டாயமாக நுழைய முயன்றபோது, ​​ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டைச் சுற்றி பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாகக் கூறி மூன்று கமாண்டோக்களை சிஐஎஸ்எஃப் பணிநீக்கம் செய்தது மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.

77 வயதான தோவலுக்கு, மத்திய விஐபி பாதுகாப்புப் பட்டியலின் கீழ் 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் - சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் சிறப்பு ஆயுதப் பிரிவினால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பிப்ரவரி 16 சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் நடத்திய நீதிமன்ற விசாரணை, ஐந்து அதிகாரிகளையும் பல்வேறு பிரிவுகளில் குற்றவாளிகளாகக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததை அடுத்து, தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டிஐஜி கவுசிக் கங்குலி மற்றும் அவரது மூத்த கமாண்டன்ட்- நவ்தீப் சிங் ஹீரா ஆகிய இரண்டு அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இருவருக்கான மாற்று அதிகாரிகள் சமீபத்தில் சிறப்பு சேவை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment