Advertisment

தமிழக கிராமங்களில் அதிக சதவிகித ஓபிசி குடும்பங்கள்: புள்ளிவிவரம் கூறுவது என்ன?

17.24 கோடி கிராமப்புற குடும்பங்களில், 44.4% ஓ.பி.சி மக்கள் என்று தரவுகள் காட்டுகிறது; அதில் 21.6% பட்டியல் இனத்தவர் (எஸ்சி); 12.3% பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் 21.7% பிற சமூகக் குழுக்கள் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Amid caste census calls, data shows nearly half of rural homes OBC households, tamil nadu, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கை, கிராமப் புறங்களில் பாதிக்கு மேல் ஓபிசி குடும்பங்கள், census, tamil nadu, tamil nadu population, india, obc, sc, st

17.24 கோடி கிராமப்புற குடும்பங்களில், 44.4% ஓ.பி.சி மக்கள் என்று தரவுகள் காட்டுகிறது; அதில் 21.6% பட்டியல் இனத்தவர் (எஸ்சி); 12.3% பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் 21.7% பிற சமூகக் குழுக்கள் உள்ளனர். மொத்த கிராமப்புற குடும்பங்களில் 9.3 கோடி அல்லது 54% விவசாய குடும்பங்கள் உள்ளதாக இந்த தரவுகள் காட்டுகிறது.

Advertisment

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளதற்கு மத்தியில், நாட்டில் உள்ள 17.24 கோடி கிராமப்புற வீடுகளில் 44.4 சதவிகிதம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தரவுகள் கூறுகின்றன. மேலும், இதில் ஓபிசி குடும்பங்கள் தமிழ்நாடு, பீகார், தெலுங்கானா, உத்தர பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 7 மாநிலங்களின் கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த மாநிலங்கள் 235 மக்களவை உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது.

இந்தத் தகவல்கள் கிராமப்புற இந்தியாவில், 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட திட்ட அமலாக்க மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், வேளாண் குடும்பங்கள் மற்றும் 2019 ஆம் ஆண்டின் வீட்டு உரிமையாளர்களின் நிலம் மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும். 2018-19 விவசாய ஆண்டுக்கான இந்த தரவு - இந்தியாவில் விவசாய ஆண்டு ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை கடைபிடிக்கப்படுகிறது.

17.24 கோடி கிராமப்புற குடும்பங்களில், 44.4% ஓ.பி.சி பிரிவு மக்கள் உள்ளதாக இந்த தரவு காட்டுகிறது; 21.6% பட்டியல் பிரிவினரும் (எஸ்சி); 12.3% பட்டியல் பழங்குடியினரும் (எஸ்டி) மற்றும் 21.7% பிற சமூகக் குழுக்கள் உளதாகவும் இந்த தரவு காட்டுகிறது. மொத்த கிராமப்புற குடும்பங்களில் 9.3 கோடி அல்லது 54% விவசாய குடும்பங்கள் உள்ளன.

கிராமப்புற ஓபிசி குடும்பங்களில் அதிக விகிதம் தமிழ்நாட்டில் (67.7%) மற்றும் நாகாலாந்தில் மிகக் குறைவாக (0.2%) குடும்பங்கள் உள்ளன. தமிழ்நாடு தவிர, 6 மாநிலங்களில் - பீகார் (58.1%), தெலுங்கானா (57.4%), உத்தரப் பிரதேசம் (56.3%), கேரளா (55.2%), கர்நாடகா (51.6%), சத்தீஸ்கர் (51.4%) - ஓ.பி.சி குடும்பங்கள் கிராமப்புற வீடுகளில் பாதிக்கும் மேல் உள்ளன. இந்த 7 மாநிலங்கள் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 235 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல், ராஜஸ்தான் (46.8%), ஆந்திரா (45.8%), குஜராத் (45.4%) மற்றும் சிக்கிம் (45%) ஆகிய நான்கு மாநிலங்களில் அகில இந்திய எண்ணிக்கையான 44.4%ஐ விட கிராமப்புற ஓ.பி.சி குடும்பங்களின் அதிக பங்கு உள்ளது. மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, ஹரியானா, அசாம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், திரிபுரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய 17 மாநிலங்களில் குறைந்த அளவு ஓபிசி மக்களின் பங்கு உள்ளது. தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது கிராமப்புற ஓ.பி.சி பிரிவு குடும்பங்கள் உள்ளன.

இந்த கணக்கெடுப்பு முடிவுகளின்படி 9.3 கோடி விவசாய குடும்பங்களில், 45.8% ஓ.பி.சி பிரிவு மக்கள்; 15.9% எஸ்சி; 14.2% எஸ்டி மற்றும் 24.1% பிற சமூகக் குழுக்கள் உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு விவசாய குடும்பத்திற்கு சராசரி மாத வருமானம் ('செலுத்தப்பட்ட செலவுகள்' அணுகுமுறையின் அடிப்படையில்) தரவை வழங்குகிறது. அகில இந்திய அளவில் ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 2018-19 விவசாய ஆண்டில் ரூ.10,218 ஆக இருந்தது. இது ஓ.பி.சி விவசாய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் (ரூ .9,977), எஸ்சி குடும்பங்களில் (ரூ. 8,142), எஸ்டி குடும்பங்களில் (ரூ. 8,979) குறைவாக இருந்தது. இருப்பினும், 'மற்ற சமூகக் குழுக்களின்' விவசாய குடும்பங்கள், சராசரியாக மாத வருமானம் ரூ.12,806 ஐப் பதிவு செய்துள்ளன.

மாநிலங்களைப் பொறுத்தவரை, விவசாய ஆண்டு 2018-19ல் விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ஓ.பி.சி பிரிவில் ரூ.5,009 முதல் ரூ.22,384 வரை இருந்தது. வருமான தரவு கிடைக்கும் 23 மாநிலங்களில், உத்தரகாண்ட் ஒபிசி விவசாய குடும்பத்திற்கு அதிக சராசரி மாத வருமானத்தைப் பதிவு செய்துள்ளது, ஒடிசா (ரூ. 5,009) கீழே பதிவு செய்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Obc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment