Advertisment

’எனது உடல்நிலை பற்றி வதந்தி; நான் நலமாக இருக்கிறேன்’ - உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் வதந்தி என்றும் தான் நலமுடன் இருப்பதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amit Shah, covid-19 , delhi

Amit Shah, covid-19 , delhi

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் வதந்தி என்றும் தான் நலமுடன் இருப்பதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல்நிலை சரியில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அமித்ஷா “நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்பதை இன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் உடல்நிலை பற்றி வெளியாகும் வதந்திகள் தவறானவை என்றும் அவை தவறான நோக்கம் கொண்டவை என்று கூறுவதற்கு பாஜக ஆர்வமாக உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அமித்ஷாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியானது குறித்து, அமித்ஷா கூறுகையில், “சிலர் என் மரணத்திற்காக பிரார்த்தனை செய்தனர்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான அரசின் போராட்டத்தில் வேலையாக இருப்பதால் இந்த வதந்திகள் பற்றி அவர் கவனம் செலுத்தவில்லை என்று முன்னாள் பாஜக தலைவர் அமித்ஷா கூறினார்.

இது குறித்து அமித்ஷா கூறுகையில், “நாடு தற்போது ஒரு உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறது. நாட்டின் உள்துறை அமைச்சராக நான் மும்முரமாக இருப்பதால், இந்த வதந்திகளில் எல்லாம் நான் கவனம் செலுத்தவில்லை. இது இரவில் தாமதமாக என் கவனத்திற்கு வந்தபோது, ​​இந்த மக்கள் அனைவரும் தங்கள் கற்பனை எண்ணங்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே நான் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால், எனது கட்சித் தொண்டர்கள் மற்றும் எனது நலம் விரும்பும் லட்சக் கணக்கானவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் கவலையை என்னால், புறக்கணிக்க முடியாது. எனவே நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், எனக்கு எந்த நோயும் இல்லை என்பதை இன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

மேலும், இந்து மத நம்பிக்கையின்படி, ஒருவரின் உடல்நிலை குறித்த வதந்திகள் அந்த நபரை மேலும் பலப்படுத்தக்கூடும் என்று அமித்ஷா கூறினார். எனவே, அனைவரும் இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சுகளை விட்டுவிட்டு, என் வேலையைச் செய்ய அனுமதிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய முன்வரக்கூடும்" என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Amit Shah Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment