Advertisment

அமித்ஷாவுக்கு லிப்போமா ஆபரேசன் - லிப்போமா என்றால் என்ன - முழு விபரம் இதோ...

Amit shah: லிப்போமா என்பது தோலுக்கு அடியில், கொழுப்பு செல்களில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சி ஆகும். சிலசமயங்களில் இந்த கட்டியினால் எரிச்சல் ஏற்படலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமித் ஷாவின் 'ஒரே நாடு ஒரே மொழி' கருத்துக்கு தமிழ் மக்களின் reaction....

Tamilnadu live updates - amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு , கழுத்து பகுதியில் உள்ள கட்டியை அகற்றும் பொருட்டு சிறிய ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் கழுத்து பகுதியில் கட்டியை அகற்றுவதற்கான ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது. மயக்க மருந்து கொடுத்து இந்த ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

லிப்போமா என்பது தோலுக்கு அடியில், கொழுப்பு செல்களில் ஏற்படும் அபரிமிதமான வளர்ச்சி ஆகும். சிலசமயங்களில் இந்த கட்டியினால் எரிச்சல் ஏற்படலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

லிப்போமாஸ் யார் யாருக்கு ஏற்படும்

லிப்போமாஸ் எனப்படும் தோலின் அடிப்புறத்தில் ஏற்படும் கட்டி, பாரம்பரியமாக சில குடும்பத்தினரிடையே மட்டும் தொடர்ந்து வருகிறது. கார்ட்னர் சின்ட்ரோம், கவ்டன் சின்ட்ரோம், மடுலங்க் சின்ட்ரோம் மற்றும் அடிபோசிஸ் டோலோரோசா நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு இந்த லிப்போமா குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதிக உடற்பருமன், அதிக கொழுப்பு, நீரிழிவு, கல்லீரல் நோய்கள் மற்றும் குளுகோஸ் இன்டாலரன்ஸ் உள்ளிட்டவைகளாலும் லிப்போமா குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அறிகுறிகள்

லிப்போமா உடலின் எந்தபகுதியில் வேண்டுமானாலும் ஏற்படும். குறிப்பாக தோலின் அடிப்பகுதியிலேயே அதிகளவில் தோன்றும். கழுத்து, தோள்பட்டை, பின்பகுதி, வயிறு, கைகள் உள்ளிட்ட இடங்களில் லிப்போமா பாதிப்பு அதிகம் இருக்கும்.

தொடுவதற்கு மிருதுவாக அந்த கட்டிகள் இருக்கும், சிறிது அழுத்தம் தந்தாலே அதை அகற்றி விடலாம்.

இரண்டு இஞ்ச் அளவை விட சிறியதாகவே இந்த கட்டிகள் இருக்கும். நரம்பு பகுதிக்கு அருகில் இந்த கட்டிகள் தோன்றிவிட்டால், ரணவேதனையை கொடுத்துவிடும்.

எப்போது டாக்டரை அணுகலாம்

நமது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் அசாதாரணமான நிலையில் கட்டிகளோ அல்லது கொப்புளங்களோ ஏற்பட்டாலோ, அதன் வடிவம் பெரியதாகி கொண்டே வந்தாலோ உடனடியாக டாக்டரை அணுகிவிட வேண்டும். இந்த கட்டியின் காரணமாக, தோலின் நிறத்திலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கவனம்.

லிப்போமா சிகிச்சை முறை

லிப்போமா கட்டியை, ஆபரேசன் மூலமாக மட்டுமே அகற்ற முடியும். நோயாளிக்கு மயக்க மருந்து அளித்து சிறிய ஆபரேசன் மூலமாகவே இந்த கட்டிகளை அகற்றி விடலாம். ஆபரேசன் நடந்த நாளே, நோயாளியும் வீட்டிற்கு சென்றுவிடலாம்.

கட்டிகள் பெரிய அளவில் இருந்தால், லிப்போசக்ஷன் முறை மூலமாக கட்டிகளை அகற்றியாக வேண்டும். இந்த சிகிச்சை முறையால், உடலில் சிறுதழும்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment