Advertisment

அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருக்கலாம், எதிர்க்கட்சிகளின் பங்கு என்ன?அமித் ஷா

Amit shah Virtual rally: இது மிகவும் துயரமான சம்பவம். இந்த துயரங்களை என்னால் உணர முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த துயரங்களை உள்வாங்கினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருக்கலாம், எதிர்க்கட்சிகளின் பங்கு என்ன?அமித் ஷா

கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருந்திருக்கலாம், தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், அரசின்  அர்பணிப்பை யாராலும் குறைகூற முடியாது. அதன், அர்பணிப்பு மிகவும் தெளிவாக இருந்தது என்று அமித் ஷா தெரிவித்தார்.

Advertisment

கொரோனா பெருந்தொற்று முடக்கநிலை காரணமாக ஏற்பட்ட துயரங்களை துடைக்க நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 1,70,000 கோடி பொருளாதார உதவி தொகுப்பை  அறிவித்தது. ஆனால்,கொரோன தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் என்ன? என்ற கேள்வியை  காணொலி காட்சி மூலம் ஓடிசா மக்களோடு உரையாற்றிய போது அமித் ஷா எழுப்பினார்.

அமித் ஷா கூறுகையில், " சிலர் ஸ்வீடன் நாட்டில் இருந்து கொண்டு, இந்தியாவில் கொரோனா பரவலை எப்படி தடுக்க வேண்டும் என்று போதித்து வருகின்றனர். சிலர் அமெரிக்காவில் இருந்து புத்திமதி சொல்கின்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்?  நாட்டு மக்களின் துயரங்களுக்கு உங்களின் செயல்பாடுகள் என்ன? அதை வெளிப்படைத் தன்மையோடு தெரிவியுங்கள். நான், எனது பதிலை இங்கு பதிவு செய்து வருகிறேன். 60 கோடி மக்களின் துரயங்களை சமாளிக்க நரேந்திர மோடி 1,70,000 கோடி அளவிலான பொருளாதார உதவித் தொகுப்பை அறிவித்தார். நேர்காணலைத் தவிர, உங்களின் பங்களிப்பு என்ன? " என்று தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புகையில் துயரங்களை அனுபவித்தனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. இது மிகவும் துயரமான சம்பவம். இந்த துயரங்களை என்னால் உணர முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த துயரங்களை உள்வாங்கினார்.

நாட்டில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களை அடைய வேண்டும் என்பதற்காக, மே 1ம் தேதியில் இருந்து  சிறப்பு ஷார்மிக் ரயில்கள் இயக்கப்பட்டன. முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும்  தொழிலாளர்கள் சிறப்பு வாகனங்கள் மூலம் ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பெருவாரியான செலவினங்களை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன.  இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டது.  ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, வீடு திரும்புவதற்கு முன்பு 1,000 -2,000 வரையிலான நிதியுதவியும் வழங்கப்பட்து . ஓடிசா மாநிலத்திற்குள் மட்டும் கிட்டத்தட்ட  3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வருகை புரிந்தனர். மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து செயல்பட்ட காரணத்தினால் தான், 1.25 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களில் தத்தம் குடும்பங்களோடு வாழ்ந்து வருகின்றனர்"என்று தெரிவித்தார்.

மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டதாக நான் நம்புகிறேன். கூட்டாச்சித் தத்துவத்தை நிலை நாட்டும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்தது. கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 5 முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். மாநிலங்களின் உண்மையான மனநிலையை நாங்கள் உணர முயன்றோம். அவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்தும் அளித்தோம். பாரபட்சம் காட்டாமல்  ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிகைகளில் ஈடுபட்டோம். இதுதான், பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடு" என்று தெரிவித்தார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அமித் ஷா தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றுக்கு பெரிய நாடுகள் சிதைத்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா எண்ணற்ற பேரிடர்களையும், பெருந்தொற்றையும் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம், தடுப்பு நடவடிக்கைகளில் அரசு நிர்வாகங்கள் முதன்மையாக இருந்தன. ஆனால், நரேந்திரா மோடி மக்களை முதன்மைப்படுத்தினர். அன்றாட மக்களை கோவிட் -19 வீரர்களாக மாற்றினார். விளைவு, மக்களின் விழிப்புணர்வு அரசு நிர்வாகத்தை பலபடுத்தும் வகையில் அமைந்தது" என்று தெரிவித்தார்.

முதலாவதாக, மார்ச் 22 அன்று கடைபிடிக்கப்பட்ட  மக்கள் ஊரடங்கு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த வரலாறு புத்தகத்தில், மக்கள் தானாக முன்வந்து ஊரடங்கு வெற்றியாக்கியதை பொன் வார்த்தைகளில் எழுதப்பட வேண்டும். தங்களால் முடியும் என்றும், தாங்கள் முடிவு செய்தால், பெரிய சவாலை ஒன்றிணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் நாட்டு மக்கள் இந்த ஊரடங்கு மூலம் சுட்டிக் காட்டினர். மின் விளக்குகள் அணைக்கப்பட்டும், தீபங்கள் ஏற்றப்பட்டும், ஒலி எழுப்பியும் கொரோனா வீரர்களுக்கு தங்களது நன்றியினை பறைசாற்றினார் என்று தெரிவித்தார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்திகளை பிரதமர் ஊக்குவித்து வருகிறார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட  ஓடிசா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட பொருளாதார அறிவிப்புகள் குறித்து பேசிய அமித் ஷா,"பிரதமர் தனது உயிரையும் பணயம் வைத்து, ஓடிசா மக்களுக்கு தோல் கொடுத்தார்" என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment