Advertisment

காஷ்மீரின் சொல்லப்படாத கதை: கண்டுபிடிக்கப்படாத கலைப்பொருட்கள்; மூடப்பட்ட வழக்குகள்

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள 94 கலைப்பொருட்கள் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவை; காணாமல் போன கலைப்பொருட்கள் பற்றிய விசாரணை சிறிதளவும் முன்னேறவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காஷ்மீரின் சொல்லப்படாத கதை: கண்டுபிடிக்கப்படாத கலைப்பொருட்கள்; மூடப்பட்ட வழக்குகள்

ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவில் உள்ள ஒரு கோவிலின் இடிபாடுகள். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஷியாம்லால் யாதவ்)

Shyamlal Yadav

Advertisment

நியூயார்க்கின் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் (மெட்) உள்ள 77 கலைப்பொருட்கள், இப்போது தமிழக சிறையில் இருக்கும் பழங்கால பொருட்கள் கடத்தல்காரருடன் தொடர்புள்ளவையாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் சொல்லப்படாத கதையைச் சொல்லும் 90 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் அதே மியூசியத்தில் உள்ளன.

இதையும் படியுங்கள்: அமெரிக்க அருங்காட்சியகத்தில் இந்திய பொக்கிஷங்கள்; தமிழக சிறையில் உள்ள கடத்தல்காரருடன் தொடர்புடையவை

ஒருபுறம், ஜம்மு காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்த 81 சிற்பங்கள், ஐந்து ஓவியங்கள், ஒரு கையெழுத்துப் பிரதியின் ஐந்து பக்கங்கள், இரண்டு காஷ்மீர் கம்பளப் பழங்காலப் பொருட்கள் மற்றும் ஒரு பக்க கையெழுத்து பிரதி ஆகியவை அடங்கிய குறைந்தபட்சம் 94 கலைப்பொருட்கள் கொண்ட மெட் மியூசியத்தின் வலிமையான ஆசியா சேகரிப்புகளில் எதுவுமே அவற்றின் ஆதாரத்தில் விவரங்கள் இல்லை, அல்லது பின்னணி ஆவணங்கள், அவை எப்போது வழங்கப்பட்டன, யாரால் வழங்கப்பட்டன போன்ற விவரங்கள் இல்லை என சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) மற்றும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஃபைனான்ஸ் அன்கவர்டு ஆகியவற்றுடன் இணைந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய விசாரணை வெளிப்படுத்துகிறது.

மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன கலைப்பொருட்கள் மீது பல எஃப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன, இந்த வழக்குகளில் சில "கண்டுபிடிக்கப்படவில்லை" என்று மூடப்பட்டுள்ளன என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்த ஆர்.டி.ஐ பதிவுகள், நீதிமன்ற பதிவுகள் மற்றும் போலீஸ் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்ரீநகரின் முக்கிய தளங்களையும் பார்வையிட்டது மற்றும் பல நிபுணர்களையும் பேட்டி கண்டது.

ஒரு காலத்தில் ஜம்மு காஷ்மீரில் செழித்தோங்கிய சைவம், வைஷ்ணவம் மற்றும் பௌத்தம் ஆகிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பல கலைப்பொருட்கள் தற்போது மெட் மியூசியத்தில் உள்ளன. மெட் மியூசியத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கலைப் பொருட்களில், 24 கலைப் பொருட்கள் அமெரிக்கக் கணிதவியலாளரான மறைந்த சாமுவேல் ஐலன்பெர்க்குடன் தொடர்புடையது, அவர் அமெரிக்காவைச் சேர்ந்த பழங்காலப் பொருட்கள் விற்பனையாளரின் கூட்டாளியாக இருந்தார் என விசாரணை முகமைகள் கூறுகின்றன.

இரண்டு சிற்பங்கள் மற்றும் ஒரு ஓவியம் ஆகிய மூன்று கலைப்பொருட்கள், சிலை கடத்தல் மற்றும் திருட்டு குற்றச்சாட்டில் தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கடத்தல்காரர் சுபாஷ் கபூருடன் தொடர்புடையவை.

ஜம்மு காஷ்மீர் சிற்பங்கள் தொடர்பான மெட் மியூசியத்தின் விவரப்பட்டியல், ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ஹர்வான் புத்த மடாலயத்தில் இருந்து எட்டாம் நூற்றாண்டு காம்தேவ் சிலை மற்றும் அதன் ஐந்து ஓடுகளில் ஒன்று (மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டு) சுபாஷ் கபூரின் நியூயார்க் கேலரியான ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் (AOP), மூலம் முறையே 1993 மற்றும் 1992 இல் பெறப்பட்டது எனக் காட்டுகிறது.

இந்த பட்டியலில் விஷ்ணுவின் 15 சிற்பங்களும், சக்ரபுருஷ், சாரதா, கஜலட்சுமி மற்றும் கார்த்திகேயா, சிவலிங்கங்கள் மற்றும் புத்தர், நின்ற நிலையில் இருக்கும் சூரியக்கடவுள் போன்ற சில கடவுள்கள் மற்றும் தெய்வங்களும் மற்றும் பிற சிற்பங்களும் அடங்கும், இவற்றில் பல ஆறாம்-எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தையவை. 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "கின்னரிஸ் (பாதி-பறவை, பாதி-பெண்)" என்ற தலைப்பில் "கோல்ட் இன்செட் வித் கார்னெட்" என்ற தலைப்பில் உள்ள கவனத்தை ஈர்க்கும் கலைப்பொருளும் இதில் அடங்கும்.

இந்திய தொல்லியல் துறையின் (ASI) RTI பதிவுகளின்படி, 1998 ஆம் ஆண்டில் ஹர்வானில் இருந்து 11 மலர் ஓடுகள் காணாமல் போனதாகவும், 2008 ஆம் ஆண்டில் பாரமுல்லாவில் உள்ள ஃபதேகர் கோவிலில் இருந்து ஒரு கந்தர்வ சிலை சிற்பம் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரிலிருந்து 1,795 பழங்கால பொருட்கள் மட்டுமே தொல்பொருள் மற்றும் கலைப்பொருட்கள் புதையல் சட்டம், 1972 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என ஆர்.டி.ஐ பதிவுகள் காட்டுகின்றன.

இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கூடுதல் டைரக்டர் ஜெனரல் பி.ஆர்.மணி, ஜம்முவிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ள அக்னூர் மாவட்டத்தில் உள்ள அம்பரானில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட 65 டெரகோட்டா மனிதத் தலைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன என்று மதிப்பிடுகிறார். மெட் மியூசியத்தில் உள்ள எந்த கலைப்பொருட்கள் பற்றியும் தனக்கு தெரியாது என்று அவர் கூறினார். பி.ஆர். மணி 1999-2000 இல் கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளராக அந்த இடத்தில் ஒரு அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். 1930 களின் நடுப்பகுதியில் ஹங்கேரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சார்லஸ் ஃபேப்ரி இந்த தளத்தை முதலில் தோண்டியதாக பதிவுகள் காட்டுகின்றன.

ஜம்மு காஷ்மீரின் தொல்பொருட்கள், காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இயக்குநரகத்தின்படி, காணாமல் போன சிலைகள் மற்றும் சிற்பங்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்: "உட்கார்ந்த நிலையில் உள்ள புத்தர்" (மரம்), "நின்ற நிலையில் உள்ள தாரா" (வெண்கலம்), "ஜெயின் தீர்த்தங்கர்" (பித்தளை) மற்றும் "புத்தர்". இந்த பழங்கால பொருட்கள் ஆகஸ்ட் 10, 1973 இல் திருடப்பட்டதாகவும், ஏப்ரல் 1975 இல், வழக்கு "கண்டுபிடிக்கப்படவில்லை" எனக் குறிக்கப்பட்டு மூடப்பட்டதாகவும் இயக்குநரகத்தின் பதிவுகள் காட்டுகின்றன.

செப்டம்பர் 27, 1969 அன்று திருடப்பட்டதாகக் கூறப்படும் ஷா-இ-ஹம்தானின் சிறு ஓவியம் உட்பட இன்னும் பல உள்ளன.

தவிர, முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் முத்திரையுடன் கூடிய குரானின் நகல் செப்டம்பர் 11, 2003 முதல் காணவில்லை எனப் புகாரளிக்கப்பட்டது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. மேலும், இதுதொடர்பாக சி.பி.ஐ.,யால் ஒரு தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் பின்னர் "கண்டுபிடிக்கப்படவில்லை" என்று மூடப்பட்டன.

லடாக்கிலிருந்து காணாமல் போன கலைப்பொருட்களையும் பதிவுகள் காட்டுகின்றன: “22 தங்க செப்புச் சட்டங்களும், படிக மற்றும் யானைப் பற்களால் செய்யப்பட்ட இரண்டு ஸ்தூபிகளும்” 1998 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த ஜன்ஸ்கர் கோன்பாவிலிருந்து (கார்கில் மாவட்டம்) திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கும் "கண்டுபிடிக்கப்படவில்லை" என மூடப்பட்டது.

"காஷ்மீரின் இந்து புனிதங்கள்" (2014) என்ற புத்தகத்தை எழுதிய ஆர்.எல்.பட் கூறுகையில், "பழங்காலப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பல வழக்குகளில், எஃப்.ஐ.ஆர்.கள் சாத்தியமில்லை, ஏனெனில் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தீவிரவாதத்தின் போது வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நமது ஆலயங்களில் இருந்து பெரும்பாலான நினைவுச்சின்னங்கள் கடத்தப்பட்டுள்ளன. நமது நிறுவனங்கள் இப்போது நமது சொந்த சட்டம் மற்றும் சர்வதேச சட்டங்களைப் பயன்படுத்தி செயல்பட வேண்டும்,” என்று கூறினார்.

அக்டோபர் 16, 2018 அன்று, பள்ளத்தாக்கு குடிமக்கள் கவுன்சிலின் இம்தாத் சாகி தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றம், "எதிர்காலத்தில் தொல்லியல் தளங்கள் மற்றும் தொல்பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக போதுமான கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று அப்போதைய மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

“நமது வளமான பாரம்பரியம் கொள்ளையடிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை மாநில அதிகாரிகள் கைவிட்டனர். காணாமல் போன தொல்பொருட்கள் பற்றிய அனைத்து புகார்களும், கண்டுபிடிக்க முடியாதவை என மூடப்பட்டுள்ளன, அவை மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும், மேலும் அவற்றைக் கண்டுபிடிக்க ஏஜென்சிகள் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும், ”என்று இம்தாத் சாகி கூறினார்.

அருங்காட்சியகங்களுக்கான சர்வதேச வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்ட பின்னர், “கலாச்சாரச் சொத்தின் சட்டவிரோத இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உரிமையை மாற்றுவதைத் தடைசெய்தல் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள்”, கூறுகிறது: “ஒரு பொருளை வாங்கும்போது அல்லது நன்கொடையாக அல்லது வேறு வழிகளில் வாங்கும்போது, ​​அருங்காட்சியகங்கள் பொருளின் வரலாறு மற்றும் ஆதாரத்தை சரிபார்ப்பதில் உரிய விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில், "கலைபபொருட்கள் சேகரிப்புக்குள் நுழையும் அனைத்து பொருட்களும் கையகப்படுத்தும் நேரத்தில் உள்ள சட்டங்கள் மற்றும் கடுமையான கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய அதிக முயற்சி எடுக்கிறது" என்று மெட் மியூசியம் கூறியது.

1998 இல் இறப்பதற்கு முன், போலந்தில் பிறந்த சாமுவேல் ஐலன்பெர்க் ஆசிய கலையின் முக்கிய சேகரிப்பாளராக அறியப்பட்டார். ICIJ ஆல் விசாரிக்கப்பட்ட நீதிமன்ற பதிவுகள், அவர் 2020 இல் இறப்பதற்கு முன்பு பழங்கால பொருட்களை கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவில் விசாரணையில் இருந்த பழங்கால பொருட்கள் வியாபாரி டக்ளஸ் லாட்ச்ஃபோர்டின் கூட்டாளியாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ICIJயின் தொலைந்த பழங்காலப் பொருட்கள் பற்றிய விசாரணையின் சுருக்கம்:

இந்தியன் எக்ஸ்பிரஸின் ஷியாம்லால் யாதவ், நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் (மெட்) பட்டியலைப் பார்த்தார், அதில் குறைந்தது 77 பழமையான தொல்பொருட்கள் மற்றும் 59 ஓவியங்கள் பிரபல கலைக் கடத்தல்காரர் சுபாஷ் கபூருடன் எப்படியோ இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

திருட்டு மற்றும் சிலை திருட்டு குற்றச்சாட்டில் தற்போது தமிழகத்தில் சிறையில் இருக்கும் கபூருடன் தொடர்புடைய மெட் வசம் உள்ள பழங்காலப் பொருட்களின் முழு பட்டியலைப் பாருங்கள்.https://tamil.indianexpress.com/india/india-treasure-trove-sitting-in-us-museum-is-linked-to-smuggler-in-tamil-nadu-jail-611114/

சரி, இந்தியாவில் இருந்து கலைப்பொருட்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நாம் ஏன் அவற்றை திரும்ப கொண்டு வர முடியாது? "அதிகாரப்பூர்வமாக" காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தொல்பொருட்களுக்கும், உலகச் சந்தைகளில் வெளிவரும் மற்றும் அருங்காட்சியகங்களில் காணப்படுவதற்கும் இடையே உள்ள இடைவெளியே இந்தியா தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும்.

தொல்பொருட்கள் என்றால் என்ன, அவற்றைப் பாதுகாக்கும் சட்டங்கள் என்ன?https://tamil.indianexpress.com/explained/antiquities-in-abroad-what-indian-international-laws-says-611748/

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment