“தெலுங்கு மற்றும் தமிழ் மக்களின் உறவு அண்ணன்- தம்பி போன்றது” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

இன்னும் 2 நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இவரின் வருகை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Andhra CM Chandrababu Naidu Visits Anna Arivalayam
Andhra CM Chandrababu Naidu Visits Anna Arivalayam

Andhra CM Chandrababu Naidu Visits Anna Arivalayam : தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வருகிறார்.  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான நாயுடுவின் உறவினர் ஒருவரின் திருமணம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதற்காக சென்னை வந்தார்  சந்திரபாபு நாயுடு.

தேர்தல் பரப்புரைக்காக முக ஸ்டாலின் தற்போது திருவாரூரில் இருப்பதால் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோருடன் அரசியல் தொடர்பாக ஆலோசனையில் அவர் ஈடுபட்டார். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் சந்திரபாபு நாயுடு.

அனைவருக்கும் வணக்கம். தெலுங்கு – தமிழ் மக்களின் உறவு அண்ணன் தம்பி உறவு. சென்னை மாகாணத்தில் தமிழ் மக்களும் தெலுங்கு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

மாநிலத்தில் தற்போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில்லை. மோடியின் ஆட்சி தான் நிலவி வருகிறது. அதிமுகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு விழும் ஓட்டு.

டெல்லியின் ஜந்தர் மந்தரில் கபாலத்துடன் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை சந்திக்க மோடிக்கு நேரம் இல்லை.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க உதவினாரா, மக்கள் கஷ்டத்தில் உழன்ற போது பெரியார், எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்கள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்து மோடி கற்றுக் கொள்ள வேண்டும்.முக ஸ்டாலினை முதல்வராக பார்க்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தமிழில் பேசினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

11ம் தேதி தான் ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு இருப்பதாக அவர் புகார் அளித்துள்ளார்.  இன்னும் இரண்டே நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால் இவரின் வருகை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க : Election 2019: ரத்தாகிறதா வேலூர் மக்களவைத் தேர்தல்?

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Andhra cm chandrababu naidu visits anna arivalayam this afternoon

Next Story
மனைவி பா.ஜ.க, அப்பாவும் சகோதரியும் காங்கிரஸ் – ஜடேஜா என்ன செய்தார் தெரியுமா?Ravindra Jadeja
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express