Advertisment

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஜெகன்மோகன் ரெட்டி புகார்: தலைமை நீதிபதிக்கு கடிதம்

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது புகார் தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
jagan Mohan reddy, ap cm jagan Mohan reddy letter, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபடி மீது ஜெகன் மோகன் ரெட்டி மீது புகார், jagan Mohan reddy letter to cji, jagan Mohan reddy complain on sc judge, நீதிபதி என்வி ரமணா, andhra pradesh cm, ஜெகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம், s a bobde, N V Ramana, andhra pradesh high court influence, tamil indian express

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது புகார் தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அவருக்கு அடுத்து உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் சில நீதிபதிகளின் பணி மூப்பு வரிசையில் செல்வாக்கு செலுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி எழுதியுள்ள 8 பக்க கடிதத்தில், “நீதிபதி ரமணா தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக இருப்பதாக

தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவிப்பதற்கு முன்பு, அமராவதியில் உள்ள நீதிபதி ரமணாவின் இரண்டு மகள்களும் மற்றவர்களும் சம்பந்தப்பட்ட பிரச்னைக்குரிய நில பரிவர்த்தனைகள் குறித்து ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை விசாரணை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியால் அக்டோபர் 6ம் தேதி எழுதப்பட்ட இந்த கடிதத்தை, முதல்வரின் முதன்மை ஆலோசகர் அஜய கல்லம் ஹைதராபாத்தில் சனிக்கிழமை மாலை ஊடகங்களில் வெளியிட்டார்.

சண்டே எக்ஸ்பிரஸ் இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் கருத்து கேட்க அணுகியது, ஆனால், அதற்கு எந்த பதிலும் வரவில்லை.

கடந்த மாதம், நீதிபதி ரமணா, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆர்.பானுமதி எழுதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​“நீதிபதிகள் தங்கள் சொந்த பாதுகாப்பில் பேசுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளதால், அவர்கள் இப்போது விமர்சனங்களுக்கான மென்மையான இலக்குகளாகக் கருதப்படுகிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பெருக்கத்தால் இந்த பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது. இதில் நீதிபதிகள் வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் அவதூறான பதுவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.” என்று கூறினார்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது கடிதத்தில், தெலுங்கு தேசம் கட்சிஒரு சில கெளரவ நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எவ்வளவு முக்கியமான நிகழ்வுகல் என்பதை குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை ஒரு இணைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மே, 2019-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. என்.சந்திரபாபு நாயுடு ஆட்சி ஜூன், 2014 முதல் மே, 2019 வரை செய்தபோது, அளிக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் விசாரிக்க உத்தரவிட்டதிலிருந்து, நீதிபதி என்.வி.ரமணா நீதி நிர்வாகத்தின் போக்கில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் தம்மலபதி சீனிவாஸ் மேற்கொண்ட நில பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெகன்மொகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

“குற்றம் சாட்டப்பட்டவரால் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை திரும்ப செலுத்தப்பட்டதன் அடிப்படையில், மோசடி புகார் மற்றும் குற்ற விசாரணை நிறுட்தப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், நீதித்துறையின் ஒவ்வொரு நீதித்துறை மரபும் அடிப்படைக் கொள்கையும் இத்தகைய உத்தரவுகளால் மீறப்படுகின்றன” என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 15ம் தேதி, அமராவதியில் நிலம் வாங்குவது தொடர்பாக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவு, தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர் விவரங்களை உயர் நீதிமன்றம் ஊடகங்களுக்கு அளிக்க தடுக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Supreme Court Of India Andhra Pradesh Jagan Mohan Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment