செம்மரங்கள் வெட்டினால் சுட்டுத் தள்ளுவோம்: ஆந்திர போலீஸார் எச்சரிக்கை - Andhra Pradesh police warns that will shot those who mining Red sandalwood | Indian Express Tamil

செம்மரங்கள் வெட்டினால் சுட்டுத் தள்ளுவோம்: ஆந்திர போலீஸார் எச்சரிக்கை

செம்மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆந்திர போலீஸார் எச்சரிக்கை

Red sanders, Andhra Pradesh, Red sanders smuggler, Red Sandal Wood,

செம்மரங்களை வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆந்திர போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளது. செம்மரங்கள் பல்வேறு காரணங்களுக்கான அதிக மதிப்பு வாய்ந்ததாக சந்தையில் கருதப்படுகிறது. இதன் காரணமாக இதனை சட்ட விரோதமாக வெட்டி கடத்தலில் ஈடுபடுபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சேலம், ஏற்காடு, திருவண்ணாமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதியில் இருந்து தமிழகர்கள் இடைத்தரகர் மூலமாக செம்மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி தமிழக கூலித் தொழிலாளிகள் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் குறிப்பிடும்படியாக, கடந்த 2015-ம் ஆண்டு கொடுர சம்பவம் அரங்கேறியது. செம்மரங்கள் வெட்டியாக கூறி 20 தமிழகர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் தான் அது. இந்த நிலையில், செம்மரங்களை வெட்டவோ, கடத்தவோ வருபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆந்திர போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி காந்தாராவ் கூறும்போது: செம்மரங்களை கடத்துவதை தவிர்க்க ஆந்திர போலீஸார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரங்களை வெட்டுபவர்கள் கடத்தல்காரர்களாவே கருத முடியும். ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டவோ, கடத்தவோ வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.செம்மரங்களை வெட்ட ஆந்திர வருபவர்கள் தமிழக நாட்டு துப்பாக்கிகளை வைத்துள்ளனர். குறிப்பாக, ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் துப்பாக்கிகளுடன் செம்மரங்களை வெட்ட வருவதாக தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Andhra pradesh police warns that will shot those who mining red sandal wood