Advertisment

9.51 வினாடியில் 100மீ - ஸ்ரீனிவாச கௌடா சாதனையை விஞ்சிய மற்றொரு கம்பாலா வீரர்

அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Another Kambala runner breaks Srinivas Gowda’s record Nishant Shetty

Another Kambala runner breaks Srinivas Gowda’s record Nishant Shetty

ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட் உடன் ஒப்பிடப்பட்ட கம்பாலா வீரர் ஸ்ரீனிவாச கௌவுடாவின் வேகத்தையே மிஞ்சியுள்ளார் நிஷாந்த் ஷெட்டி எனும் கம்பாலா எருமைப் பந்தைய வீரர்.

Advertisment

பிப்ரவரி 1 கர்நாடகாவில் நடந்த கம்பாலா எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.62 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சென்ற ஞாயிறன்று பஜகோலி ஜோகிபேட்டு எனும் ஊரைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவர் 143 மீட்டர் தூரத்தை தனது அணியின் எருமைகளை விரட்டிக்கொண்டு 13.68 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார் என்று கம்பாலா எருமை பந்தைய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. வென்னூரில் நடைபெற்ற சூர்ய - சந்திர கம்பாலா போட்டியில் இந்த சாதனையை படைத்ததாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி கணக்கிட்டால் அவர் முதல் 100 மீட்டர்களை 9.51 நொடிகளில் ஓடிக் கடந்துள்ளார். இது ஸ்ரீனிவாச கௌடாவின் 9.55 நொடிகள் எனும் நேரத்தைவிட குறைவு என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஸ்ரீநிவாஸா கௌடாவை  நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அப்போது வழங்கப்பட்டது.

ஸ்ரீனிவாச கவுடாவை நேரில் அழைத்து பயிற்சிகள் கொடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், தனக்கு கம்பாலா விளையாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளும், கட்டடத் தொழிலாளியாக பணியாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருவாயும் போதும் என்றும் ஸ்ரீனிவாசா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment