Advertisment

சுயேச்சை உறுப்பினர்களுக்கும் பொருந்தும் கட்சி தாவல் தடை சட்டம்

இந்த சட்டம் அரசியல் வாதிகள் கட்சி மாறுவதில், மூன்று விதமான சூழ்நிலைகளை எடுத்துரைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுயேச்சை உறுப்பினர்களுக்கும் பொருந்தும் கட்சி தாவல் தடை சட்டம்

குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸில் சேருவதாக அறிவித்திருந்தார். ஆனால் நேற்று காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அரசியல் சிக்கல் காரணமாக கட்சியில் முறையாக சேர முடியவில்லை என கூறியிருந்தார். அதற்கான காரணம் கட்சி தாவல் தடை சட்டம் என்பது தான் என தெரியவந்துள்ளது.

Advertisment

இந்திய அரசியலமைப்பு சட்டம் 52வது திருத்தத்தின் படி, 10ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு, மற்றொரு கட்சியில் இணைந்தால், அவரின் பதவி பறிக்கப்பட்டுவிடும். இந்த சட்டமானது தேர்தலில் சயேச்சையாக போட்டியிட்ட எம்எல்ஏ-க்களுக்கும் பொருந்தும். அவர்கள் ஏதேனும் கட்சியில் சேர்ந்தால், பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்

இந்த சட்டம் அரசியல் வாதிகள் கட்சி மாறுவதில், மூன்று விதமான சூழ்நிலைகளை எடுத்துரைக்கிறது.

  1. மக்கள் பிரிதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர், கட்சியின் கொள்ளைகள் பிடிக்காமல் வேறு கட்சிக்கு மாறுதல்
  2. மக்கள் பிரிதிநிதியாக சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஏதெனும் கட்சியில் சேருதல்

இந்த இரண்டு நிகழ்வுகளிலும், சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாற்றுவதன் மூலம் தனது பதவியை இழக்க நேரிடம்

மூன்றாவது, நியமன எம்.பி.க்களாக அறிவிக்கப்படுபவர்கள் ஆறு மாதங்களுக்குள் கட்சியில் சேர வேண்டும். இல்லையெனில், அவர்களும் பதவியை இழக்க நேரிடும்

கட்சி தாவல் தடை சட்டம் உருவானது எப்படி

1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, கட்சித் தடை தாவல் சட்டத்திற்கான முன்னேடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இச்சட்டத்தின் முக்கியத்தவத்தை அனைவரும் அறிந்தனர். ஏனென்றால், அப்போது மக்கள் பிரிதநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 376 பேரில் 176 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், நாளடைவில் அரசியல் கட்சியில் இணைந்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினரான பி.வெங்கடசுப்பையா, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுதல் தடுப்பது குறித்த பரிந்துரைகள் செய்வதற்கான உயர் மட்டக் குழுவை அமைக்க முன்மொழிந்தார்.

அதன்படி, 1969இல், உள்துறை அமைச்சர் ஒய் பி சவான் தலைமையிலான குழு, கட்சி விலகல் பிரச்சினை குறித்து ஆய்வு செய்தது. இந்த குழு, கட்சி தாவல் என்றால் என்ன? எது கட்சி தாவல் ? ஏன் சில உறுப்பினர்களின் நடவடிக்கை கட்சி தாவல் இல்லை? என்பதையெல்லாம் வரையறுத்து அறிக்கை சமர்ப்பித்தது.

ஆனால், ஒய் பி சவான் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து, கட்சி தாவலை தடுப்பது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கான முயற்சிகள் 1969 மற்றும் 1973 ஆகிய இரண்டு முறையும் தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து, 1978 இல் நடந்த முயற்சியில், சுயேச்சை மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முறை மட்டும் அரசியல் கட்சியில் சேர அனுமதி வழங்கப்பட்டது.

இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் நடந்த மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் வென்றது. இதன் தாக்கமாக, 1985 ஆம் ஆண்டில் கட்சி தாவல் தடை சட்டம் இயற்றும் மூன்றாவது முயற்சி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. அப்போது, இயற்றிய சட்டத்தில், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சியில் சேருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

பதவிநீக்கம்

இந்த கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், கட்சி மாறிய எம்எல்ஏ அல்லது எம்.பியை பதவி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான கால அவகாசத்தைக் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக, கட்சி தாவல் தடை சட்டம் ஆளும் கட்சியின் விருப்பத்தின் பேரில் அரங்கேறிவந்தது. சில சமயங்களில் சபாநாயகர் உடனடியாக பதவிநீக்கம் செய்வார் அல்லது சில சமயங்களில் அதன் மீதான விவாதம் வருஷ கணக்கிலும் நடைபெற்று வரும்.

இதுதொடர்பாக விமர்சனங்கள் ஏழு, கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் நபர்கள் மீது மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், பாஜக எம்எலஏவான முக்குல் ராய், திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ளார். அவரை தகுதி நீக்கச் செய்யக்கோரிய மனு ஜூன் 17 முதல் சட்டப்பேரவை சபாநாயகரிடம் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அலகாபாத் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் சுட்டிக்காட்டி, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மனு மீது நடவடிக்கை எடுக்கச் சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது.

2003 திருத்தம்

கட்சி தாவல் தடை சட்ட பயணத்தின் கடைசி திருத்தம் 2003 இல் வந்தது.

பிரதமர் அடல் வாஜ்பாயின் அரசாங்கத்தால் அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரணாப் முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்த மசோதாவை ஆய்வு செய்தது.

அப்போது, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்குத் தாவினால், அது கட்சி பிளவாகக் கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது" என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jignesh Mevani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment