இந்திய பொருளாதாரத்தை காப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேற்று கிரகத்தின் உதவியை நாடுகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பர் விமர்சித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ரீட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
” பண வீக்கம் 7.01 சதவிகிதமாகவும், வேலைவாய்ப்பின்மை 7.8 சதவிகிதமாகவும் பதிவான நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூப்பிட்டர், ப்லாட்டோ படங்களை ட்வீட் செய்திருப்பது எந்த ஆச்சரியத்தயும் ஏற்படுத்தவில்லை. தன்மீதும் , அமைச்சகத்தின் பொருளாதாரா வல்லுநர்கள் மீதும் நம்பிக்கையை இழந்த நிலையில் அவர் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற வேற்று கிரகத்தின் உதவியை நாடுகிறார். இதனால் அவர் பொருளாதாரம் தெரிந்த ஜோதிடரை நியமிக்க வேண்டும்” என்று அவர் பதிவு செய்துள்ளார்.