Advertisment

”அவன் இருந்தாலும் இறந்தாலும் எங்களுக்கு ஒன்று தான்” - அல்கொய்தா தலைவர் மரணம் குறித்து அவருடைய குடும்பம்

ரிஸ்வான் தன் தாயிடம் உமரின் மரணம் குறித்து கூறிய போது அவர் எந்த விதமான வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AQIS chief Umar Asim killed in Afghanistan

AQIS chief Umar Asim killed in Afghanistan

Shivam Patel

Advertisment

இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒருவர் தான் உமர். ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் அதிகம் வாழும் ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க - ஆப்கானிய கூட்டுப்படை ராணுவ தாக்குதலின் போது கொல்லப்பட்டுள்ள இந்தியர் இவர். தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் அவருடைய மரணத்தை 08ம் தேதி உறுதி செய்தது. நேற்று (09/10/2019) தான் இந்த தகவல் அவருடைய குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. உமர் இறுதியாக அவரது குடும்பத்தாரிடம் 1998ம் ஆண்டு தான் பேசியுள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற அவர் மௌலானா ஆசிம் உமராக, அல்கொய்தா இயக்கத்தின் இந்திய தலைவராக 2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

அவருடைய சகோதரர் ரிஸ்வான் இது குறித்து கூறுகையில் “20 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற ஒருவரைப் பற்றி இப்போது கூறப்படும் துயர் செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவருடைய மரணமோ, இருப்போ எங்களுக்கு எந்தவிதமான உணர்ச்சிகளையும் தரவில்லை. அவர் எங்களுக்கு ஏனோ தெரியாத மனிதராகவே இருக்கிறார் இப்போது” என்று கூறியுள்ளார்.

5 பேர் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்த உமர் வீட்டில் அனைவருக்கும் செல்லப்பிள்ளை என்று விவரிக்கிறார் அவருடைய சகோதரர். 8ம் வகுப்புவரை இந்து இண்டெர் கல்லூரியில் படித்த அவர் பின்பு மதராஸாவில் இணைந்தார். பின்னர் தர் - உல் - உலூமிற்கு சென்று மௌல்வி ஆவதற்கான மார்க்க கல்வியை கற்றார். விடுமுறை நாட்களில் சம்பாலுக்கு வரும் அவர் அடிக்கடி ரிஸ்வானை பார்ப்பது இல்லை. வீட்டின் மூத்த மகனான ரிஸ்வான் டெல்லியில் படித்துவிட்டு அங்கேயே வேலை தேடிக் கொண்டிருந்தார்.

1998ம் ஆண்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு நான் சவுதி அரேபியாவிற்கு செல்கிறேன். ஆங்கிலத்தில் இருந்து அரேபியத்திற்கு தகவல்களை மொழி பெயர்க்க ஆட்கள் தேர்வு செய்யபட்டு வருகிறார்கள் என்று கூறி 1 லட்ச ரூபாய் கேட்டார். அன்றைய சூழலில் நிறைய பேர் இந்தியாவில் இருந்து அங்கு மொழி பெயர்ப்பு பணிகளுக்காக சென்றுள்ளார்கள். ரிஸ்வான் அப்போது சம்பாலில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் அறிவியல் மற்றும் கணித வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய அப்பா உமர் கேட்ட பணத்தை தர மறுத்ததால் கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.. பின்பு எவ்வளவு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்று கூறுகிறார் ரிஸ்வான்.

2008 மற்றும் 2015 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வந்தன. ஆனால் ஒரு போதும் அவன் எங்களை அழைத்து பேசவில்லை. உமரை எங்கள் ஏரியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் அவன் அனைவரும் பவுலர் நரேந்திர ஹிர்வானி என்று தான் அழைப்பார்கள். அவன் அவ்வளவு சிறப்பாக பந்துவீசுவான். உமரின் தந்தை 2016ம் ஆண்டு உயிரிழந்தார். ரிஸ்வான் தன் தாயிடம் உமரின் மரணம் குறித்து கூறிய போது அவர் எந்த விதமான வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. வேறென்ன எங்களால் செய்ய முடியும் ? என்று கேள்வி கேட்கிறார் ரிஸ்வான்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment