மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் அருண் ஜெட்லி

காலியாக இருந்த எம்.பி பதவிக்கு அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வை, குடியரசு துணைத்தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு பாராளுமன்றத்தில் இன்று காலை நடத்தி வைத்தார்.

சமீபத்தில், மாநிலங்களவையில் உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்ததை அடுத்துத் தேர்வு நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பலம் எம்.பி.களாக நியமனம் செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களில் இருந்து போட்டியிட்ட பா.ஜ.க தலைவர்களான ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ஹர்நாத் யாதவ், அசோக் பாஜ்பாய், விஜய் பால் சிங் தோமர், காந்தா கர்தம், சாகல்தீப் ராஜ்பார் மற்றும் அனில் அகர்வால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

முன்னதாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் உரிய நேரத்தில் பதவி ஏற்க முடியவில்லை. எனவே சிகிச்சை முடிந்து உடல்நலம் தேர்ச்சிப் பெற்ற நிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

×Close
×Close