அரசியல் எதிராளிகள் மீது ஒருபோதும் வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது: அருண் ஜெட்லி

அரசு தங்களுடைய தொண்டர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அரசியல் எதிராளிகள் மீது ஒருபோதும் வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது.

அரசியல் எதிராளிகள் மீது ஒருபோதும் வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 29-ம் தேதி திருவனந்தபுரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்ம அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி, உயியிழந்த ராஜேஷின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின் அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அருண் ஜெட்லி பேசினார். அப்போது அவர் கூறும்போது, இடதுசாரிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வன்முறை அதிகரிக்கிறது என்பது வேதனையளிக்கிறது.
கேரளாவில் பா.ஜ.க வளர்ச்சியை பொறுக்க முடியாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்முறையில் ஈடுபடுகிறது.

ராஜேஷ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மறக்க மாட்டோம். கேரளாவில் உள்ள பாஜக தொண்டர்கள் அல்ல. அவர்களுடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது. குற்றவாளிகளை நீதியின் முன்னர் நிறுத்துவது என்பது மாநில அரசின் பொறுப்பாகும். போலீஸ் இந்த விஷயத்தில் செயல்படுவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்த விஷயங்கள் நடந்தால் தான் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

அரசு தங்களுடைய தொண்டர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அரசியல் எதிராளிகள் மீது ஒருபோதும் வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது. கேரளாவில் நடந்த வன்முறையானது பா.ஜ.க அல்லது பா.ஜ.க கூட்டணி ஆட்சி பெறும் மாநிலங்களில் நடந்திருந்தால், இது வேறு விதமான பிரச்சனையாக இருந்திருக்கும். அரசு வழங்கிய விருதுகள் திருப்பி அளிக்கப்பட்டிருக்கும், மேலும் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கியிருப்பார்கள் என்று கூறினார்.

×Close
×Close