Advertisment

இலவசங்களை ‘ரெவ்டி கலாச்சாரம்’ என்று விமர்சித்த மோடி; கெஜ்ரிவால் பதிலடி

இலவச திட்டங்களை ரெவ்டி கலாச்சாரம் என்று பிரதமர் மோடி விமர்சனம்; அமைச்சர்களுக்கு கிடைக்கும் வசதிகள் ஏழைக்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை – கெஜ்ரிவால் பதிலடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இலவசங்களை ‘ரெவ்டி கலாச்சாரம்’ என்று விமர்சித்த மோடி; கெஜ்ரிவால் பதிலடி

Delhi CM Kejriwal tears into Modi after ‘revdi politics’ jibe: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் வழங்கும் அரசியலை குறிப்பிட்டு “ரெவ்டி கலாச்சாரம்” என்று விமர்சித்தற்காக அவரை சாடினார்.

Advertisment

உத்தரப் பிரதேசத்தில் பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசிய பிரதமர், “இந்த நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரெவ்டி கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் உங்களுக்காக புதிய அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அல்லது பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்க மாட்டார்கள். இந்த ரெவ்டி கலாச்சார மக்கள் இலவச ரெவ்டி கொடுத்து பொதுமக்களை வாங்க நினைக்கிறார்கள். அவர்களின் இந்த சிந்தனையை நாம் கூட்டாக தோற்கடித்து, நாட்டின் அரசியலில் இருந்து ரெவ்டி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்,” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பு: முன்னாள் போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் கைது

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பொதுமக்களுக்கு இலவச மற்றும் தரமான சேவைகளை வழங்குவது இலவச ரெவ்டி அல்ல என்று கூறினார். உண்மையில், இலவச ரெவ்டி என்பது குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகள் மற்றும் அமைச்சர்களுக்கு தேவையற்ற சலுகைகளை அளிப்பதை உள்ளடக்கியது என்று கெஜ்ரிவால் கூறினார்.

“கெஜ்ரிவால் இலவச ரெவ்டிகளை வழங்குகிறார், இலவசங்களை விநியோகிக்கிறார் என்று என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கேலி செய்யப்படுகிறேன். நான் என்ன தவறு செய்கிறேன் என்று நாட்டு மக்களிடம் கேட்க விரும்புகிறேன். டெல்லியில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவச மற்றும் தரமான கல்வியை வழங்குகிறேன். நான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன், நான் இலவச ரெவ்டிகளை வழங்குகிறேனா? அல்லது நாட்டின் அடித்தளத்தை அமைக்கிறேனா? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

”டெல்லி அரசுப் பள்ளிகளில் தற்போது 18 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கு முன் அவர்களின் எதிர்காலம் இருளில் இருந்தது... இன்று, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நாம் கொடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு நான் இலவச மற்றும் தரமான கல்வியை வழங்கும் நிலையில், நான் என்ன குற்றம் செய்தேன்? கடந்த 75 ஆண்டுகளில் முதன்முறையாக டெல்லி அரசுப் பள்ளிகள் 99% தேர்ச்சி பெற்றுள்ளது” என்று கெஜ்ரிவால் கூறினார்.

இந்த நிலை 1947 அல்லது 1950 இல் செய்யப்பட்டிருக்க வேண்டும். இது இலவச ரெவ்டி என்று அழைக்கப்படுவதில்லை. இந்த நாட்டின் அஸ்திவாரத்திற்கு நாங்கள் கற்களை இடுகிறோம். டெல்லி அரசு மருத்துவமனைகளின் நிலையை பிரமாதமாக்கியுள்ளோம், மேலும் நாடு முழுவதும் பேசப்படும் மொஹல்லா கிளினிக்குகளைத் திறந்துள்ளோம்... இதைத்தான் இலவச ரெவ்டி என்று அழைப்பதா? என்று கெஜ்ரிவால் கூறினார்.

"டெல்லியில் யாருக்கேனும் விபத்து ஏற்பட்டால், யாராவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டால், ஃபாரிஷ்டே திட்டத்தின் கீழ், அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது... இந்த திட்டம் மூலம் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். கெஜ்ரிவால் இலவச ரெவ்டிகளை வழங்குகிறாரா அல்லது உன்னதமான பணிகளைச் செய்கிறாரா என்று அவர்களிடம் கேளுங்கள், ”என்று கெஜ்ரிவால் கூறினார்.

ஆம் ஆத்மியின் இலவச மின்சாரத் திட்டம் மற்றும் அதன் விமர்சகர்கள் குறித்து கெஜ்ரிவால் பேசுகையில் “கெஜ்ரிவால் ஏன் இலவச மின்சாரம் தருகிறார் என்று சிலர் கேட்கிறார்கள்? நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். உங்கள் அமைச்சர்களுக்கு எவ்வளவு இலவச மின்சாரம் கிடைக்கிறது? உங்களுக்கும் உங்கள் அமைச்சர்களுக்கும் 4,000-5,000 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் பரவாயில்லை. ஆனால், ஏழைகளுக்கு 200-300 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தால், உங்களுக்கு அதில் பிரச்சனைகள் உள்ளன.” என்று கூறினார்.

டெல்லி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள இலவச யாத்திரை திட்டம், இலவச யோகா வகுப்புகள் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், இவை எதையும் “இலவச ரெவ்டிஸ்” உடன் ஒப்பிட முடியாது என்று கெஜ்ரிவால் கூறினார்.

“என்னிடம் பிரச்சனை செய்பவர்கள் தங்களுக்கென தனியார் விமானம் வாங்க ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்துள்ளனர். கெஜ்ரிவால் விமானம் வாங்குவதில்லை. அந்தப் பணத்தைச் சேமித்து, தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பேருந்து பயணத்தை இலவசமாக்குகிறார். கெஜ்ரிவால் என்ன தவறு செய்கிறார்? என்று கெஜ்ரிவால் கூறினார்.

“இவ்வளவு இலவசங்களை அளித்தாலும், டெல்லி பட்ஜெட் இன்று லாபத்தில் இயங்குகிறது. இதை நான் சொல்லவில்லை, சில நாட்களுக்கு முன்புதான் சி.ஏ.ஜி அறிக்கை வந்தது. 2015 முதல், கெஜ்ரிவால் அரசு வந்ததில் இருந்து, டெல்லியின் பட்ஜெட் லாபத்தில் இயங்குகிறது என்று கூறியுள்ளனர்; அதற்கு முன் அது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது,” என்று கெஜ்ரிவால் கூறினார்.

எந்த நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடாமல், குறிப்பிட்ட சில "நண்பர்களுக்கு" ஆதரவாக செயல்படுவதாக மத்திய அரசை கெஜ்ரிவால் தாக்கினார். "இலவச ரெவ்டி என்றால் என்ன, இந்த நாட்டில் இலவச ரெவ்டி யார் விநியோகிக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கிய ஒரு பெரிய நிறுவனம் உள்ளது. அவர்கள் கடன்களை விழுங்கினர், வங்கிகள் திவாலாயின. அந்த நிறுவனம் ஒரு அரசியல் கட்சிக்கு சில கோடிகளை நன்கொடையாக வழங்கியது, இந்த நிறுவனம் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது இலவச ரெவ்டி,” என்று கெஜ்ரிவால் கூறினார்.

“உங்கள் நண்பர்களின் ஆயிரக்கணக்கான கோடி கடனை நீங்கள் தள்ளுபடி செய்தால், அது இலவச ரெவ்டி. நீங்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் சென்று, அந்த பயணத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, வெளிநாட்டு அரசாங்கங்களுடனான ஒப்பந்தங்களை உங்களது சில நண்பர்களுக்கு வழங்கினால், அதுதான் இலவச ரெவ்டி” என்று கெஜ்ரிவால் கூறினார்.

நாட்டில் நேர்மை அரசியல் மற்றும் ஊழல் அரசியல் என இரண்டு வகையான அரசியல் நடைமுறையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி பணத்தைச் சேமிப்பதன் மூலமும், பொதுமக்களுக்குச் சேவை செய்யப் பயன்படுத்துவதன் மூலமும் நேர்மையான அரசியல் செய்து வருவதாகவும், ஊழல் அரசியல் லாபம் ஈட்டுவதற்காக ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஒப்பந்தங்களை நிர்ணயிப்பதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.

"அவர்கள் தங்கள் அமைச்சர்களுக்கு அனைத்து வசதிகளையும் கொடுக்கிறார்கள், ஆனால் மக்கள் அதைக் கேட்டால், இவை இலவசங்கள், இலவச ரெவ்டிகள் விநியோகிக்கப்படுகின்றன என்று கூறுகிறார்கள். இன்று, நேர்மையான அரசியல் வேண்டுமா அல்லது ஊழல் வேண்டுமா என்பதை மக்களும் நாடும் தீர்மானிக்க வேண்டும்" என்று கெஜ்ரிவால் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Modi Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment