ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினுக்கு, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மோர்பி துயரச் சம்பவத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக ஒரு போலியான, கற்பனையான பொய் கதையை கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சத்யேந்தர் ஜெயினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பாதுகாப்புக்காக பணம் கொடுத்ததாக துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதியுள்ள கடிதம் குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்த துயர நிகழ்வில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கதை கட்டுவதாகக் கூறியுள்ளார்.
பஞ்சாப் தேர்தலுக்கு முன், அவர்கள் (பா.ஜ.க) குமார் விஸ்வாஸை அழைத்து வந்தனர். பஞ்சாப் தேர்தலில் தோற்கப் போகிறோம் என்பதை உணர்ந்த பா.ஜ.க, குமார் விஸ்வாஸின் தோள்களில் இருந்து சுட்டது. இப்போது குஜராத்தில் சுகேஷ் சந்திரசேகரின் ஆதரவு தேவைப்படும் அளவுக்கு பா.ஜ.க மோசமான நிலையில் உள்ளது. அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதை மட்டுமே நீங்கள் காட்டுகிறீர்கள். ஒருமுறை சி.பி.ஐ அதிகாரியாக, சட்டச் செயலாளராக, பிரதமர் அலுவலக அதிகாரியாகக் காட்டிக் கொண்டு ஒருவரை ஏமாற்றியதாகக் கேள்விப்பட்டேன்… எப்படி நம்புவது? குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜ.க ஒரு போலியான, கற்பனையான மற்றும் கட்டுக் கதையை கூறுகிறது. பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பா.ஜ.க-வின் தந்திரம் இது” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “குஜராத்தில் பா.ஜ.க-வின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அது நாட்டின் மிகப்பெரிய குண்டர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. ஊடகங்கள் விழிப்புடன் இருக்கட்டும் - இந்த நாடகமெல்லாம் மோர்பியில் இருந்து மீடியாவின் கவனத்தைத் திசைதிருப்பவே நடத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 தேதி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், சுகேஷ் சந்திரசேகர் கூறியிருப்பதாவது: “எனக்கு 2015 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மியின் சத்யேந்தர் ஜெயினைத் தெரியும். தென் மண்டலத்தில் கட்சியில் எனக்கு முக்கியமான பதவியை வழங்குவதாக வாக்குறுதியளித்து ஆம் ஆத்மிக்கு 50 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளேன். விரிவாக்கத்தைத் தொடர்ந்து நான் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு உதவியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சத்யேந்தர் ஜெயின் சுகேஷ் சந்திரசேகரை சிறையில் சந்தித்ததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரை 2019 ஆம் ஆண்டு ஜெயின், அவரது செயலர் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் சிறையில் சந்தித்ததாகவும், அந்த காவலர் மாதமும் ரூ. 2 கோடி செலுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறையில் பாதுகாப்பாக வாழ்வதற்கும், அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் அவருக்குப் பாதுகாப்புப் பணம் அளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் சத்யேந்தர் ஜெயினுக்கு மொத்தம் 10 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அவரை மிரட்டி வருவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. “நான் கடுமையாக துன்புறுத்தப்பட்டேன் மற்றும் அச்சுறுத்தப்பட்டேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"