Advertisment

அரசின் செயல்பாடுகள் : இரு பொருளாதார நிபுணர்களின் மாறுபட்ட கருத்து

இது ஒரு ஒத்திசைவான பார்வைதானா? இது நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஒரு பார்வையா? இந்த கேள்விகளில் நான் உங்களுடன் உடன்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suit boot ki sarkar jibe : Arvind Subramaniyan comments on Corporate Tax

Suit boot ki sarkar jibe : Arvind Subramaniyan comments on Corporate Tax

கடந்த மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி

Advertisment

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நான்கு அல்ல ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்டன என்றும், ஆனால் “சூட், பூட் கி சர்க்கார்”( சூட் போடவர்களுக்கான அரசாங்கம் ) என்ற அரசியலால் இந்த சீர்திருத்த்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்திற்கு கடினமாக இருந்தது என்றும், அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒ. பி  ஜிண்டால் சிறப்பு சொற்பொழிவுகளில் பேசிய சுப்பிரமணியன், தற்போதைய பொருளாதார மந்தநிலை காரணமாக, கார்ப்பரேட் வரி சீர்திருத்தம் போன்ற கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அரசியல் மூலதனத்தை தற்போதைய அரசு கையகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.  2014 அக்டோபரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் 'ராகுல் காந்தி' தேசிய முற்போக்கு கூட்டணியை  "சூட், பூட் கி சர்க்கார்" என்று சொல்லிய போது சுப்பிரமணியன்  இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி - ஜீ ஜிங்பின் சந்திப்பு

சமையல் எரிவாயு, கழிப்பறைகள், வங்கிகளின் கணக்குகள், மின்சாரம், வீட்டுவசதி மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை அமல்படுத்திய திட்டங்கள் தான்  கார்ப்பரேட் வரிக் குறைப்பு போன்ற கடுமையான முடிவுகளை எடுக்கும் அரசியல் மூலதனத்தை அரசிற்கு தந்துள்ளது என்றார் சுப்பிரமணியன்.  இந்தியாவில் ஒரு ஆழமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது, அதை நாம் மறுக்கவோ,மறக்கவோ முடியாது என்றும் தெரிவித்தார். இந்த அரசிடம் ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை போன்றவைகளில் செயல்படுத்திய விதங்கள் தவறாய் இருந்தாலும், தொலைநோக்கு பார்வையோடு கொண்டுவரப்பட்டன என்று தனது உரையை முடித்தார்.

இதே நிகழ்வில் கலந்து கொண்ட இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநருமான ரகுராம் ராஜன் அரவிந்த்  சுப்பிரமணியனின் சில கருத்துகளுக்கு உடன்படவில்லை.  “பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையில் என்ன தொலைநோக்கு  பார்வை? என்ற கேள்வியே தனக்கு விசித்திரமாக உள்ளது என்று தெரிவித்தார். நிச்சயமாக, எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கிறது. ஆனால் கேள்வி என்னவென்றால் -  இது ஒரு ஒத்திசைவான பார்வைதானா? இது நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஒரு பார்வையா? துரதிர்ஷ்டவசமாக, இந்த கேள்விகளில் நான் உங்களுடன் உடன்படவில்லை, ”என்று கூறி  ராஜன்  தனது உரையை முடித்தார் .

Raghuram Rajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment