Advertisment

16 வயது சிறுமி பாலியல் வழக்கு : சாமியார் ஆசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஆசராம் பாபு மற்றும் 3 பேர் குற்றவாளி என அறிவித்து ஜோத்பூர் எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
asaram babu

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஆசராம் பாபு குற்றவாளி என அறிவித்து ஜோத்பூர் எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அரசாம் பாபு உட்பட, அவரின் சீடர்கள், ஷில்பி, ஷரத் சந்திரா, சவராம் ஹெத்வேத்யா ஆகியோர் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிப்பு. இந்தத் தீர்ப்பின்படி ஆசராம் பாபுவிற்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் வழங்கப்படும் தண்டனை விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும்.

Advertisment

நண்பகல் 2.30 மணியளவில் மீண்டும் கோர்ட் கூடியது. அப்போது நீதிபதி, சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாகவும், மற்ற குற்றவாளிகளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபல சாமியார் ஆசராம் பாபு, 2013ல் உத்திர பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஜோத்பூர் ஆசிரமத்துக்கு வரக்கூறிய ஆஸ்ராம் பாபு தன்னை பலாத்காரம் செய்தார் என்று அந்த இளம்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆஸ்ராம் பாவுவை கைது செய்தனர். இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 2017, மே 19-ம்தேதி முதல் இந்த வழக்கில் வாதம் தொடங்கியது. இதுவரை ஆஸ்ராம் பாபு 12 முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்து அத்தனை முறையும் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவர இருந்த நிலையில், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியான ஆகிய பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஜோத்பூர் சிறை வளாகத்தில் உள்ள ஜோத்பூர் எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றம் அளித்தது. இதனால் கலவரங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சாட்சியாக இருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் வீட்டைச் சுற்றியும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Jodhpur Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment