Advertisment

கேரளாவில் பரபரப்பு : சபரிமலை தீர்ப்பை வரவேற்ற ஆசிரமத்திற்கு தீ வைப்பு!

சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் எந்த ஒருவரையும் விட்டுவிட மாட்டோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரள ஆசிரமம்

கேரள ஆசிரமம்

கேரளாவில் சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாமல் என்று உச்ச நீதிமன்றமளித்த தீர்ப்பை வரவேற்ற ஆசிரமத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரளா ஆசிரமம்:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றமளித்த  தீர்ப்பின் வீரியம் தற்போது வரை குறைந்தபாடில்லை. ஒருபக்கம்  கேரளா சபரிமலையில் போராட்டம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்திருந்த கேரளாவில் உள்ள சுவாமி சந்தீபாநந்தா கிரி பகவத் கீதை  ஆசிரமத்திற்கு  தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மணியளவில் சுவாமி சந்தீபாநந்தா கிரி ஆசிரமத்திற்கு சொந்தமான இரண்டு கார்கள், ஒரு ஸ்கூட்டருக்கு தீ வைக்கப்பட்டதில் வாகனங்கள்  கருகி சாம்பலாயின.

கேரள ஆசிரமம் தீ வைக்கப்பட்ட கார்கள்

கேரள  ஊடகங்களின் தகவல்களின் படி வெள்ளை மாருதி சுசுகி ஆம்னி, ஹோண்டா சிஆர்வி கார்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தீவைத்த விஷமிகளை கண்டுப்பிடிக்க விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரள ஆசிரமம் ஆசிரமத்திற்கு முன்பு நின்றுக்கொண்டிருந்த கார்கள்

இதுக் குறித்த  செய்தி வெளியானதும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “  “கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத்தான் கையிலெடுக்கின்றனர். சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் எந்த ஒருவரையும் விட்டுவிட மாட்டோம். சுவாமிஜியின் நடவடிக்கைகள் மீது சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர்” என்றார்.

publive-image சுவாமி சந்தீப்பானந்தா

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் ஐசக் தாமஸ் கூறும்போது, இந்த சம்பவத்தை கொலை முயற்சியாகவே பார்க்க வேண்டும். சபரிமலை தீர்ப்பில் சங் பரிவாரின் நிலைப்பாட்டை சுவாமி சந்தீப்பானந்தா தீவிரமாக எதிர்த்து வந்தார். ஆசிரமத்தில் தீவைக்கப்பட்டது குறித்து வெளியில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தே சுவாமிகளுக்கு தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து செயல்பட்டு பெரும் விபத்துகளை தவிர்த்துள்ளனர் என்று அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த சுவாமி சந்தீபானந்தாக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Pinarayi Vijayan Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment