Advertisment

மக்களுக்காக உணவு மூட்டையை சுமந்து செல்லும் எம்எல்ஏ

மக்களுக்காக உணவு மூட்டையை சுமந்து செல்லும் அசாம் மாநில எம்எல்ஏ ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
மக்களுக்காக உணவு மூட்டையை சுமந்து செல்லும் எம்எல்ஏ

மக்களுக்காக உணவு மூட்டையை முதுகில் சுமந்து செல்லும் அசாம் மாநில எம்எல்ஏ ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisment

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன. அசாமில் முக்கிய நதியான பிரம்மபுத்திரா, திகோ தன்சிரி, ஜியா பாரலி, பேகி, குஷியாரா, சுபன்ஸ்ரீ உள்ளிட்ட அனைத்து நதிகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசிரங்கா தேசிய பூங்கா நீரில் மூழ்கியதில் 70 விலங்குகளும் உயிரிழந்துள்ளது.

வெள்ளத்தில் மொத்தம் 66,516 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள தகவலின் படி, மாநிலத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 1,795 கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீமாஜி, பிஸ்வனாத், லகிம்பூர், சோனித்பூர், தர்ராங், நால்பரி, பர்பேட்டா, பொங்கய்கான், சிர்ராங், கொக்ரஹார், துபுரி, சோத்புர் சல்மாரா, கோலோபாரா உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வெள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு, நிவாரண உதவி உள்ளிட்டவைகள் மாவட்ட நிர்வாகம், சமூக அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை, அசாம் மாநில எம்எல்ஏ ரூப் ஜோதி குர்மி தனது முதுகில் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ரூப்ஜோதி குர்மி கூறுகையில், மற்றவர்களில் இருந்து நான் வேறுபட்டவன் கிடையாது. நான் எம்எல்ஏ-வாக இருக்கலாம். ஆனால், நானும் மனிதன் தான். மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சியே" என்றார்.

மரியானி தொகுதி எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மியின் தயார் ரூபம் குர்மி, ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார். இவரது மறைவை தொடர்ந்து ரூப்ஜோதி குருமி இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Assam Assam Flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment