Advertisment

'இதயத்தில் ரத்தம் கசிகிறது' குலாம் நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை

காங்கிரசுக்கு இந்த நெருக்கடி புதிதல்ல - 2014 முதல் நடந்த 45 தேர்தல்களில் 5-ல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை வேறு ஒரு விஷயம், தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வழக்கமான பல்லவி கூட இல்லை. மாறாக, விரக்தியும் ஆபத்தை முன்னரே உணர்வதும்தான் உள்ளது.

author-image
WebDesk
New Update
'இதயத்தில் ரத்தம் கசிகிறது' குலாம் நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை

காங்கிரஸ் கட்சிக்கு இந்த நெருக்கடி புதிதல்ல - 2014 முதல் நடந்த 45 தேர்தல்களில் 5-ல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை வேறு ஒரு விஷயம், தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வழக்கமான பல்லவி கூட இல்லை. மாறாக, விரக்தியையும் வருகிற ஆபத்தை உணர்ந்துள்ளது.

Advertisment

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் செயற்குழுக் கூட்டம் விரைவில் வரவிருக்கும் வழியைப் பற்றி விவாதிக்கப்படும் என்று சமிக்ஞை செய்தார். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய பல தலைவர்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள். சில இளம் தலைவர்கள், பஞ்சாபில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கட்சியில் இருக்கும்‘வயதாகி சோர்ந்துபோனவர்கள்’ இளம் இரத்தங்களுக்கு வழிவிட வேன்டும் என்று வாதிட்டனர்.

ஜி-23 பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல தலைவர்கள், இதுதான் நாங்கள் உங்களுக்குச் சொன்ன தருணம் என்று கூறினார்கள். “நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். மாநிலத்திற்கு மாநிலம் நம்முடைய தோல்வியைக் கண்டு என் இதயம் இரத்தம் கசிகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் குலாம் நபி ஆசாத் கூறினார். “நாங்கள் எங்கள் மொத்த இளமையையும் வாழ்க்கையையும் கட்சிக்குக் கொடுத்தோம்… நானும் எனது சக தலைவர்களும் நீண்ட காலமாகப் பேசிக்கொண்டிருந்த அனைத்து பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளையும் கட்சியின் தலைமை கவனிக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சசி தரூர், காங்கிரஸ் தலைமை சீர்திருத்தத்திற்கான தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். “காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள நாம் அனைவரும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம். காங்கிரஸ் கட்சியின் இந்தியாவைப் பற்றிய யோசனையையும், அது தேசத்திற்கு வழங்கும் நேர்மறையான செயல்திட்டத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது - மேலும் அந்த யோசனைகளை மீண்டும் தூண்டி மக்களை ஊக்குவிக்கும் வகையில் நமது நிறுவனத் தலைமையை சீர்திருத்த வேண்டும். ஒன்று தெளிவாக உள்ளது - நாம் வெற்றிபெற வேண்டுமானால் மாற்றம் தவிர்க்க முடியாதது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

சில ஜி-23 தலைவர்கள் நாளை குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியில் இருந்து விலகல்கள் மற்றும் கட்சியில் பிளவுகள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதே உடனடியான கவலை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

“இந்து-முஸ்லிம் சீட்டை விளையாடியோ அல்லது எதிர் எதிர்நிலையை உருவாக்கியோ பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று நாம் தொடர்ந்து வாதிட முடியாது. அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்று அர்த்தம். பஞ்சாபில் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? அல்லது, அதற்கு உத்தரகாண்ட், மணிப்பூர் அல்லது கோவா? இது அதை விட அதிகம். நம்முடைய தலைமைக்கு நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நம்முடைய கட்சி கட்டமைப்பைப் பொறுத்தவரை, எங்களால் எப்படி முடியும்” என்று ஒரு இளம் காங்கிரஸ் தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

“உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரியங்கா காந்தி 209 பொதுக்கூட்டங்கள் மற்றும் சாலையில் பிரச்சாரன்க்களில் பேசியுள்ளார். அவரும் ராகுல் காந்தியும் ஹத்ராஸுக்குச் சென்று, லக்கிம்பூர் கேரி விவசாயிகளின் கொலையை உச்சகட்டத்திற்கு உயர்த்தினார்கள். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. ஜாதி மற்றும் மத எதிர்நிலை உருவாக்கம் காரணமாக உ.பி.யில் எங்களால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. அது பெண்களை மையமாகக் கொண்ட பிரச்சாரம் என்ற உணர்விலிருந்து வந்தது. ஆனால், அது எந்த பகுதியையும் தொடவில்லை. எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் நம்பகத்தன்மை இல்லை என்பது வருத்தமளிக்கிறது. இது எங்கள் கருத்தை தெரிவிப்பதை கடினமாக்குகிறது” என்று ஒரு தலைவர் கூறினார்.

பஞ்சாபைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து சவால் வருகிறது என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.

“பஞ்சாப் எல்லையில் பல இடங்கள் உள்ளன. அது தாக்கத்தை ஏற்படுத்தும். எம்எல்ஏக்கள் உட்பட பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம். இந்த சவால் தலைமைக்கு தெரியுமா? தலைமைக்கு தெரிந்திருந்தால் அவர்கள் ஏதாவது செய்கிறார்களா? உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது.

இது மிகவும் ஏமாற்றமாகவும் மனப்புழுக்கமாகவும் இருந்தாலும், இந்த தோல்வி எதிர்பார்க்காதது அல்ல. தேர்தல் கையாளப்பட்ட விதம்…எதிர்பாராதது அல்ல,

எல்லாம் தவறாகிவிட்டது. தீவிரமாக போட்டியிடும் எண்ணம் இல்லை… நரேந்திர மோடி, அமித்ஷா போன்று முழு பலத்துடன் போராடியிருக்க வேண்டும். தலைமை மாறியதால் பஞ்சாபில் அமைப்பில் குழப்பம் ஏற்பட்டது. எங்கள் ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது. ஆனால், காங்கிரஸில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது” என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

பல தலைவர்கள் பஞ்சாபில் படுதோல்வி என்று அழைத்ததற்கு தலைமையை கேள்வி எழுப்பினர்: ஒரு முதல்வர் நீக்கப்பட்ட விதம் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து கட்சியின் அரசாங்கத்தை தலைமையின் "எந்த தலையீடும் இல்லாமல் குறைத்து மதிப்பிடும் விதம் குறித்து கேள்வி எழுப்பினர்.

தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட ராகுல் காந்தி, “மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அவர்களுடைய அர்ப்பணிப்புக்கு எனது நன்றி. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா “உணர்ச்சிப் பிரச்சினைகள் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை முந்திவிட்டது” என்று இன்று காலை கூறினார்.

ரந்தீப் சுர்ஜிவாலா தனது சக தலைவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறினார். “நாம் அமர்ந்திருக்கும் கிளையை உடைத்தால், மரம், கிளை மற்றும் தலைவர்கள்கூட விழுவார்கள். இன்று சில மாநிலங்களில் தெளிவாகத் தெரிகிறது” என்று அவர் கூறினார். “போரோ அல்லது பதவி வேட்கையோ மிகவும் கசப்பாக மாறியிருந்தாலும், காங்கிரஸ்காரர்கள் அமர்ந்திருக்கும் மரத்தையே நாம் சேதப்படுத்துகிறோம் அல்லது வெட்டுகிறோம். நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கேள்வி இது” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Gulam Nabi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment