scorecardresearch

டிஜிபி மாநாடு: இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் பேச்சு: இணையதளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆவணங்கள்

டெல்லியில் நடைபெற்ற அகிய இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், இந்து , இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி மாநாடு: இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் பேச்சு: இணையதளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆவணங்கள்

டெல்லியில் நடைபெற்ற  அகிய இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், இந்து , இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

எல்லா வருடமும் அகிய இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாடு டெல்லியில்  நடைபெறும் . இந்த முறை ஜனவரி 20 முதல் 22 வரை டெல்லி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் விவாதிக்காப்பட்ட விவரங்கள் தொடர்பான ஆவணங்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தது. ஆனால் இந்த புதன்கிழமை முதல் அது நீக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் முற்போக்கான வளர்ச்சியையும், பி.எப்.ஐ அமைப்புகளையும் எப்படி கையாள்வது தொடர்பான கேள்விக்கு, இந்து அமைப்புகளின் வளர்ச்சிதான் தீர்வு என்று விவாதிக்கப்பட்டுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தல் போன்ற அமைப்புகள் முற்போக்கு கருத்துகளை கொண்டு செல்பவை என்று ஒரு ஆவணம் கூறுகிறது. மேலும் பாபர் மசூதியை இடித்தது, மாட்டு கறி தொடர்பாக மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள், இந்துத்துவ கொள்கையின் வளர்ச்சி ஆகியவை இளைஞர்களின் முற்போக்கு எண்ணங்களை வளர்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

எஸ்பி படிநிலையில் இருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வலது மற்றும் இடது முற்போக்கு கருத்து நிலவுகிறது. இந்தியா என்பது பல்வேறு மக்களையும், சூழலையும் கொண்டது. ஆனால் நாம் ஒரு இடத்தில் ஒன்றுபட வேண்டும். உதாரணமாக அது விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தல்,சிவசேன போன்ற  அமைப்பாக இருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற அதிகாரிகளில் பலர், இஸ்லாமியக் கருத்துக்களை, ஒரு ஆபத்தாக பார்க்கிறார்கள். இஸ்லாமிய கருத்துதான் உலகத்தை பிரித்துள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: At dgp meet officers flag islamist hindutva outfits in radicalisation

Best of Express