மும்பை க்ரிஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 4 பேர் பலி, 16 பேர் காயம்

12வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து சற்று நேரத்தில் 13வது மற்றும் 14வது மாடி வரை பரவியது.

மும்பை தீ விபத்து : மகாராஷ்ட்ரா மாநிலத் தலைநகரம் மும்பையில் பயங்கரத் தீ விபத்து. இன்று காலை தாதர் பகுதியில் இருக்கும் க்ரிஸ்டல் குடியிருப்புப் பகுதியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளார்கள்.

19 மாடிகளை கொண்டுள்ள அக்குடியிருப்புப் பகுதியில் 12வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. நான்கு மணி நேரம் நீடித்த அந்த தீ விபத்தில் சிக்கிய 20 நபர்களை அருகில் இருக்கும் KEM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

To read this article in English 

காலை 8.45 மணி அளவில் ஏற்பட்ட சிறிய அளவில் ஏற்பட்ட விபத்து 10.50 மணி அளவில் மிகவும் மிகப் பெரிய தீ விபத்தாக உருமாறியது. 12வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்து 13வது மற்றும் 14வது மாடி வரை பரவியதால் அப்பகுதிகளில் மாட்டிக் கொண்டு மக்கள் தவித்து வந்தனர்.

KEM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நபர்களில் அதில் மூன்று ஆண்கள் மற்றும் 62 வயது பெண்மணி உட்பட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். அதில் இருவரை அடையாளம் கண்டுள்ளனர். 36 வயதான பப்லு சேய்க் மற்றும் 62 வயதான சுபதா சேல்க் ஆகியோர்களின் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close