வாஜ்பாய் மறைவு : சோகத்தில் மோடி; தலைவர்கள் இரங்கல்

Atal Bihari Vajpayee funeral :  உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் நேற்று மாலை காலமானார். Atal Bihari Vajpayee funeral: அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு: கடந்த ஜூன் 11ம் தேதி முதல் உடல்நிலையில் குறைவு ஏற்பட்ட முன்னாள்…

By: Published: August 17, 2018, 11:36:34 AM

Atal Bihari Vajpayee funeral :  உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் நேற்று மாலை காலமானார்.

Atal Bihari Vajpayee funeral: அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு:

கடந்த ஜூன் 11ம் தேதி முதல் உடல்நிலையில் குறைவு ஏற்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீர் தொற்று பாதிப்பு உண்டானதால் அவரின் உடல்நிலை பெருத்த பின்னடைவை சந்தித்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் இறுதி சடங்கு LIVE குறித்த செய்திக்கு

வாஜ்பாய் உடல்நிலை சீராவதற்கு மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும், அவரின் உடல்நலம் எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சிப் பெறவில்லை. இருப்பினும் அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

Atal Bihari Vajpayee funeral

கடந்த 16ம் தேதி (நேற்று முந்தினம்) வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வளாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்படும் மருத்துவம் குறித்தும் உடல்நலம் குறித்தும் பிரதமர் மோடி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

சின்னப்பிள்ளை … இவர் காலில் விழுந்து வாஜ்பாய் ஆசி பெற்ற காரணம் இது தான்

இந்நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தனர்.

வாஜ்பாய் எனும் சிறுவனை தேடும் கிராமம்!

பின்னர் மாலை 5.30 மணியளவில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் 5.05 மணிக்கு காலமானார் என்று மருத்துவமனை அறிவிப்பு விடுத்தது. இவரின் மறைவுக்கு பிறகு அவரது உடல் இல்லத்திலும், பிறகு பாஜக அலுவலகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலை யமுனா நதிக்கரையில் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Atal Bihari Vajpayee funeral : வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்:

வாஜ்பாய் மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

– எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ஆர்த்தி விஜ், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 36 மணி நேரங்களாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நிலை பெருத்த பின்னடைவை சந்தித்தது. எவ்வளவு முயற்சித்தும் அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரின் மறைவை பெரும் துயரத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

– குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில், “மிகவும் தன்மையான மாமனிதரை இழந்துவிட்டோம். அவரின் பிரிவு ஒவ்வொருவருக்கும் சோகத்தை அளித்துள்ளது. தலைமை, தொலைநோக்கு பார்வை, முதிர்ச்சி மற்றும் அவரி சொற்பொழிவு ஆகியவையே அவரை பெரும் தலைவர் ஆக்கியது” என்று கூறியிருக்கிறார்.

– பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் மறைவுக்கு காணொளி மூலம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில், “ 21ம் நூற்றாண்டின் சிறந்த ஆட்சிக்கான அடித்தளமாக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். அவர் கொண்டு வந்த நல்லாட்சி இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அவரின் மறைவு என்னை துக்கத்தில் ஆழ்த்தியது” என்று கண்கலங்க கூறியுள்ளார்.

– முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி, மறைந்த வாஜ்பாயின் தத்து மகள் நமிதாவிற்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தலைசிறந்த மரபுகள் காப்பதிலும் மற்றும் தலைசிறந்த குணநலன்களின் பயிற்சியாளராகவும் இருந்தவர். இந்தியா தனது சிறந்த மகனை இழந்திருக்கிறது. ஒரு மிகப் பெரிய சகாப்தம் மறைந்துவிட்டது ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மறைந்த வாஜ்பாயின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுவதுடன், அவரின் மறைவை 7 நாள் துக்க நாளாக அனுசரிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Atal bihari vajpayee funeral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X