Advertisment

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93 வயதில் காலமானார்!

Former PM Atal Bihari Vajpayeee Dead: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாலை 05.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Atal Bihari Vajpayee: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

Atal Bihari Vajpayee: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

Former PM Atal Bihari Vajpayeee Dead: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாலை 05.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 'வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும்' என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவர், அடல் பிகாரி வாஜ்பாய். கடந்த 1998-ல் 13 நாட்கள், 1999 முதல் 2004 வரை 5 ஆண்டுகள் இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். பாஜக.வில் தீவிர இந்துத்வா அல்லாத முகமாக வாஜ்பாய் பார்க்கப்பட்டார். சங் பரிவார் கொள்கைகளின் நேர் எதிரான கட்சிகளுக்கும் வாஜ்பாய் மீது அதிக மரியாதை உண்டு.

வாஜ்பாய் மரணம் LIVE UPDATES: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை To Read, Click Here

கடந்த சில ஆண்டுகளாகவே முதுமை காரணமான உடல் பிரச்னைகளால் வீட்டில் ஓய்வில் இருந்தார் வாஜ்பாய். கடந்த ஜூன் 11-ம் தேதி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Atal bihari vajpayee, Atal bihari Health, Atal bihari vajpayee Death Rumours, வாஜ்பாய் உடல்நிலை, அடல் பிகாரி வாஜ்பாய் Former PM Atal Bihari Vajpayee LIVE updates: வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ்-க்கு வந்த வெங்கையா நாயுடு

Former PM Atal Bihari Vajpayeee Dead: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

07.10 PM: கவிஞர் வைரமுத்து, 'வாஜ்பாய் மறைவு - இந்தியா அழுகிறது' என்ற தலைப்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

6.30 PM: வாஜ்பாய் இறுதிச்சடங்கு குறித்து விவாதிக்க இன்னும் சற்று நேரத்தில் மத்திய அமைச்சரவையின் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்க உள்ளது.

6.25 PM: 'இந்தியா தனது மிகச் சிறந்த மனிதரை இழந்துவிட்டது. நாடு முழுவதும் உள்ள மக்களால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். நாம் அனைவரும் அவருடைய இழந்துவிட்டோம்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

6.20 PM: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பாகும் என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

6.10 PM: 'பன்முகத்தன்மை கொண்ட ஒரு ரத்தினத்தை நாடு இழந்துவிட்டது' என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

6.00 PM: வாஜ்பாய் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 'வாஜ்பாய் மறைவை கேட்ட பிறகு மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். அவரது ஆன்மா, சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என்று ரஜினி தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

5.50 PM: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 'வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும்' என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

5.40 PM: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாலை 05.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

5:00 PM: ஜார்கண்ட் மாநிலத்தின் 3.25 கோடி மக்களும், வாஜ்பாய் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் என அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

3:45 PM: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாஜ்பாயின் நலம் விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் வந்தார்.

3:30 PM: வாஜ்பாய்க்காக பிரார்த்திப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து கூறியிருக்கிறார். நிதிஷ் குமார், நவீன் பட்நாயக் ஆகியோர் டெல்லி விரைகிறார்கள்.

2:45 PM: நரேந்திர மோடி அங்கிருந்து கிளம்பினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக’ குறிப்பிட்டார்.

2:30 PM: மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா ஆகியோரும் டெல்லிக்கு கிளம்ப இருக்கிறார்கள்.

Vajpayee, Atal, Vajpayee health, Atal bihari vajpayee, Atal bihari vajpayee live news, Atal bihari Health, அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடம், பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் வருகை Former PM Atal Bihari Vajpayee LIVE updates:வாஜ்பாய் உடல்நிலை விசாரிக்க 2-வது முறையாக இன்றும் வருகை தந்த மோடி

2:10 PM : பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாஜ்பாய் உடல்நலம் விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். நேற்று மாலை 50 நிமிடங்கள் மருத்துவமனையில் வந்து பிரதமர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1:30 PM: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகுந்த கவலை அடைந்தேன். அவரது நண்பர்கள், உறவினர்களுடன் எங்கள் எண்ணங்களையும் இணைத்துக்கொண்டு, அவரது துரித உடல்நலத்திற்கு வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

1:00 PM: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான ஃபருக் அப்துல்லா கூறுகையில், ‘இந்தியா மட்டுமல்ல, உலகமே அமைதியாக திகழவேண்டும் என பாடுபட்ட தலைவர் வாஜ்பாய். வலிமையான இந்தியாவை உருவாக்க அவர் உழைத்தார்’ என புகழாரம் சூட்டினார்.

12:20 PM: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் வாஜ்பாயை பார்க்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தனர்.

12:00 PM: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வர இருக்கிறார்கள்.

Vajpayee, Atal, Vajpayee health, Atal bihari vajpayee, Atal bihari vajpayee live news, Atal bihari Health, அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடம், பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் வருகை, அடல் பிகாரி வாஜ்பாய் மரண வதந்தி Former PM Atal Bihari Vajpayee LIVE updates:வாஜ்பாய் உடல்நிலை விசாரிக்க பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது மகள் பிரதிபாவுடன் வந்தபோது

11:30 AM: பாஜக தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங் ஆகியோர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து வாஜ்பாயை நலம் விசாரித்தனர். பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது மகள் பிரதிபாவுடன் வந்தார்.

11:15 AM : வாஜ்பாஉ உடல்நிலை குறித்து சற்று முன்னர் மீண்டும் மருத்துவ அறிக்கை வெளியிட்டது டெல்லி எய்ம்ஸ். அதில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Vajpayee, Atal, Vajpayee health, Atal bihari vajpayee, Atal bihari vajpayee live news, Atal bihari Health, Atal bihari vajpayee Death Rumours, Atal bihari vajpayee News, அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நிலை கவலைக்கிடம், பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் வருகை Former PM Atal Bihari Vajpayee LIVE updates:வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என எய்ம்ஸ் வெளியிட்ட 2-வது அறிக்கை

11:00 AM: கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமான நிலைக்கு சென்றிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று (ஆகஸ்ட் 15) இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் - கருணாநிதி To Read, Click Here

எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் : உடல்நலம் பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து! To Read, Click Here

வாஜ்பாய் உடல்நிலை: டெல்லி எய்ம்ஸில் குவிந்த தலைவர்கள் To Read, Click Here

வாஜ்பாய் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாகவும், உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் அவர் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மீடியா மற்றும் புரொட்டகால் பிரிவின் தலைவர் ஆர்த்தி விஜ் தெரிவித்தார். ஜூன் 11-ம் தேதி சிறுநீரகப் பாதை நோய் தொற்று, சிறுநீர் குறைவாக வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலையை விசாரித்தார். 55 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார் மோடி. குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை எய்ம்ஸ் சென்று நலம் விசாரித்தார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, ஹர்ஷவர்தன், ஜிதேந்திரசிங் உள்பட பலர் நேரில் சென்று சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தனர்.

 

 

Bjp Narendra Modi Atal Bihari Vajpayee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment