குஜராத்தில் ராகுல் காந்தி மீது கல்வீச்சு சம்பவம்: பாஜக நிர்வாகி கைது

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, பாஜக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, உள்ளூர் பாஜக நிர்வாகி ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, வெள்ளிக்கிழமை டானிரா என்ற இடத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கினார். பின்பு, அங்கிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களான
பனஸ்கந்தா, தாரா, மலோத்தரா பகுதிகளுக்கு காரில் சென்று பார்வையிட்டு மக்களை சந்தித்தார். அப்போது, குறிப்பிட்ட ஒரு பகுதியில் ராகுலின் கார் மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இந்தத் தாக்குதல் தொடர்பாக குஜராத் பா.ஜ.க.வினர் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். எனினும் விசாரணைக்கு பிறகே இதில் உண்மையான நிலவரம் தெரியும் என குஜராத் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூர் பாஜக நிர்வாகி ஜெயேஷ் தார்ஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து குஜராத் காங்கிரஸார், அம்மாநில பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில், தான் போராடும் காங்கிரஸ் கட்சியினரின் உணர்வுகளை மதிப்பதாகவும், ஆனால், போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.”, என ராகுல்காந்தி பதிவிட்டார்.

மேலும், இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவரே எப்படி கண்டனம் தெரிவிப்பார்? இதுதான் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல்.”, என ராகுல் காந்தி கூறினார்.

×Close
×Close