பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா டெம்பிள் எண்டர்பிரைசஸ் எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார். அதன் இயக்குநர்களில் ஒருவராக ஜெய்ஷா அங்கம் வகிக்கிறார்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் வர்த்தகம் 2014-2015-ஆம் ஆண்டில் 50,000 ரூபாயாக இருந்தநிலையில், ஒரே வருடத்தில், அதாவது 2015-2016-ஆம் ஆண்டில் 16,000 மடங்கு (80.5 கோடி) அதிகரித்ததாக, ‘தி ஒயர்’ எனும் இணையதளம் கடந்த ஞாயிறன்று கட்டுரை வெளியிட்டது.
ஆனால், இக்குற்றச்சாட்டை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முற்றிலுமாக மறுத்துள்ளார். ஜெய் ஷா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அனைத்தையும் நிராகரிப்பதாக கூறினார்.
'தி ஒயர்' இணையதளத்திற்காக அந்த கட்டுரையை ரோஹினி சிங் என்ற பத்திரிக்கையாளர் தான் எழுதினார். சமூக தளங்களில் இவரை மிகவும் மோசமாக தாக்கி ட்வீட்கள் பதிவிடப்படுகின்றது.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/z519-300x217.jpg)