தேசிய தலைநகரில் ஆட்டோ, ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்களுக்கு டெல்லி மாநில அரசு வெள்ளிக்கிழமை (அக்.28) ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, . ஆட்டோக்களுக்கான அடிப்படைக் கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிகளுக்கு ரூ.25ல் இருந்து ரூ.40 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
-
டெல்லியில் திருத்தப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்கள் முழு விவரம்
முன்னதாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை கருத்தில் கொண்டு விலையை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் மாநில அரசை கேட்டுக்கொண்டன.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டெல்லியில் ஆட்டோ, ரிக்ஷா கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil