Advertisment

அயோத்தியில் தலித் நிலங்களை சட்டவிரோதமாக வாங்கிய அறக்கட்டளை; அதிகாரிகளின் உறவினர்களுக்கு விற்பனை

மகரிஷி ராமாயண வித்யாபீத் அறக்கட்டளை (MRVT) 1990 களின் முற்பகுதியில், ராமர் கோவில் தளத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள பர்ஹாதா மஞ்சா கிராமம் மற்றும் அயோத்தியைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் பெரும் நிலங்களை வாங்கியுள்ளது

author-image
WebDesk
New Update
அயோத்தியில் தலித் நிலங்களை சட்டவிரோதமாக வாங்கிய அறக்கட்டளை; அதிகாரிகளின் உறவினர்களுக்கு விற்பனை

Shyamlal Yadav , Sandeep Singh 

Advertisment

Ayodhya: Kin of officials bought land from trust under probe for illegal transfer of Dalit land: அயோத்தியில் நில முறைகேடுகளின் பரபரப்பில், ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் அந்த நிலங்களின் உரிமை மற்றும் சிலரின் ஆதாய முரண் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. தலித் குடியிருப்பாளர்களிடமிருந்து நிலம் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டு, அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் விற்பனையாளருடன் குறைந்தது நான்கு வாங்குபவர்கள் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இந்த பரிவர்த்தனைகளின் மையமாக மகேஷ் யோகி நிறுவிய மகரிஷி ராமாயண வித்யாபீத் அறக்கட்டளை (MRVT) 1990 களின் முற்பகுதியில், ராமர் கோவில் தளத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள பர்ஹாதா மஞ்சா கிராமம் மற்றும் அயோத்தியைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் பெரும் நிலங்களை வாங்கியது. இந்த நிலத்தில், கிட்டத்தட்ட 21 பிகாஸ் (சுமார் 52,000 சதுர மீட்டர்) தலித்துகளிடம் இருந்து வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வாங்கப்பட்டது.

எம்.எல்.ஏ முதல் மேயர் வரை: ராமர் கோவில் தீர்ப்பிற்கு பிறகு அயோத்தியில் நிலம் வாங்கிய அதிகாரிகள்

உத்தரப் பிரதேச வருவாய் சட்ட விதிகள் (2016 முதல், மற்றும் அதற்கு முந்தைய ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம்), தலித் நபர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை (3.5 பிகாவிற்கும் குறைவாக இருந்தால்) மாவட்ட மாஜிஸ்திரேட்டால் அனுமதிக்கப்படாவிட்டால் தலித் அல்லாத ஒருவரால் கையகப்படுத்துவதைத் தடுக்கிறது. MRVT 1992 இல் MRVT யின் தலித் ஊழியரான ரோங்காய் என்பவரை பயன்படுத்தி சுமார் ஒரு டஜன் தலித் கிராம மக்களிடமிருந்து நிலங்களை வாங்கியுள்ளது.

விற்பனை பத்திரங்கள் ரோங்காயின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. அதைத் தொடர்ந்து, ரோங்காய் ஜூன் 1996 இல் பதிவு செய்யப்படாத நன்கொடைப் பத்திரத்தில் (டான்-பத்ரா) கையெழுத்திட்டு, அவை அனைத்தையும் MRVT க்கு "நன்கொடையாக" வழங்கினார். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் சரிபார்க்கப்பட்ட பதிவுகளின்படி, செப்டம்பர் 3, 1996ல் MRVT இன் பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்த ஒவ்வொரு விற்பனை பதிவுகளும், இந்த முழு நிலத்தையும் MRVT ரோங்காய் வழியாக தோராயமாக 6.38 லட்ச ரூபாய்க்கு வாங்கியதாகக் காட்டுகிறது. இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு (ஆகஸ்ட் 2017 முதல் பொருந்தும்), ரூ.3.90 கோடி முதல் ரூ.8.50 கோடி.

ரோங்காய் மூலம் நிலம் வாங்கப்பட்டு, MRVTக்கு "தானம்" செய்யப்பட்ட நிலத்தின் தலித் உரிமையாளர்களில் ஒருவர் மகாதேவ். பதிவுகளின்படி, மகாதேவ் தனது 3 பிகாக்களுக்கு 1.02 லட்சம் பெற்றுள்ளார். செப்டம்பர் 2019 இல், MRVT ரோங்காய் வழியாக வாங்கிய நிலத்திலிருந்து மனைகளை விற்கத் தொடங்கியபோது, ​​மகாதேவ் தனது நிலம் "சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக" வருவாய் வாரியத்தில் புகார் செய்தார்.

அவரது புகாரின் பேரில், நில மாற்றம் குறித்து விசாரிக்க கூடுதல் கமிஷனர் ஷிவ்பூஜன் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி கோரேலால் சுக்லா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அக்டோபர் 1, 2020 அன்று, அப்போதைய மாவட்ட மாஜிஸ்திரேட் அனுஜ் குமார் ஜா, "பதிவு செய்யப்படாத நன்கொடைப் பத்திரம் மூலம் (பட்டியலிடப்பட்ட சாதி நபர்களின்) நிலத்தை சட்டவிரோதமாக மாற்றியதற்காக" MRVT மற்றும் சில அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் இந்தக் குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக பதிவுகள் காட்டுகின்றன.

இதை அயோத்தி மண்டல ஆணையர் எம்.பி.அகர்வால் மார்ச் 18, 2021 அன்று அங்கீகரித்தார், இறுதியாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி உத்தரவை "திருத்துவதற்காகவும்", குறிப்பிட்ட நிலத்தை மாநில அரசிடம் திருப்பி ஒப்படைப்பதற்காகவும் அயோத்தியில் உள்ள உதவி பதிவு அதிகாரி (ஏஆர்ஓ) பான் சிங் என்பவரால் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. .

வருவாய் ஆணைகளை மறுஆய்வு செய்ய / மறு மதிப்பீடு செய்ய தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான மேல்முறையீட்டு அதிகாரியான அகர்வால், விசாரணை அறிக்கையை நடவடிக்கைக்காக வருவாய் வாரியத்திற்கு அனுப்பியபோதும், அவரது உறவினர்கள் MRVT யிடம் நிலத்தை வாங்கினார்கள்.

உண்மையில், அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ​​அகர்வாலின் மாமனார் மற்றும் மைத்துனர் முறையே பர்ஹாதா மஞ்சா கிராமத்தில் உள்ள 2,530 சதுர மீட்டர் மற்றும் 1,260 சதுர மீட்டர் நிலத்தை டிசம்பர் 10, 2020 அன்று MRVTயிடம் இருந்து வாங்கியுள்ளனர்.

மேலும், அப்போதைய தலைமை வருவாய் அதிகாரி (சிஆர்ஓ) புருஷோத்தம் தாஸ் குப்தா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஐஜி) தீபக் குமார் ஆகிய இரண்டு அரசு அதிகாரிகளின் நெருங்கிய உறவினர்கள் முறையே, அக்டோபர் 12, 2021 அன்று 1,130 சதுர மீட்டரும், செப்டம்பர் 1, 2021 அன்று 1,020 சதுர மீட்டரும் MRVTயிடம் இருந்து வாங்கியுள்ளனர்.

புருஷோத்தம் தாஸ் குப்தா, செப்டம்பர் 2021 வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அயோத்தியில் தலைமை வருவாய் அதிகாரியாக இருந்தார். CRO (கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ள அதிகாரி) என்ற முறையில், அயோத்தியில் மாவட்ட நீதிபதியால் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து நில விஷயங்களுக்கும் அவர் பொறுப்பு.

பர்ஹாதா மஞ்சா கிராமத்தில் MRVT இடம் வாங்கிய மற்றவர்களில், அயோத்தி மாவட்டத்தில் உள்ள கோசைகஞ்ச் எம்.எல்.ஏ (நவம்பர் 18, 2019 அன்று 2,593 சதுர மீட்டர்) இந்திரா பிரதாப் திவாரி (கப்பு திவாரி) மற்றும் உமாதர் திவேதி (அக்டோபர் 23, 2021 அன்று 1,680 சதுர மீட்டர்) ஆகியோர் ஆவர். உமாதர் திவேதி உத்திரபிரதேச கேடரின் ஐஏஎஸ் அதிகாரி, அவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அலகாபாத் (இப்போது பிரயாக்ராஜ்) கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றார், இப்போது லக்னோவில் வசிக்கிறார்.

இந்த அதிகாரிகளின் உறவினர்களால் வாங்கப்பட்ட மனைகள் சர்ச்சையில் உள்ள 21 பிகாக்களில் வராது, ஆனால் உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், இந்த வழக்குகள் அனைத்திலும் விற்பனையாளர் குற்றம் சாட்டப்பட்டுள்ள MRVT என்று பெயரிடப்பட்டுள்ளது, இது அந்த நிலங்களின் உரிமையின் கேள்விகளை எழுப்புகிறது.

இதற்கிடையில், ரோங்காய் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரயாக்ராஜிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள சவ்பூர் கிராமத்தில் அயோத்தியில் இருந்து வெகு தொலைவில் வசிக்கின்றனர்.

ரோங்காய் அவரது வீட்டில் இல்லை என்றாலும், அவரது மனைவி காப்ரைன் மற்றும் மருமகள் கச்ராஹி ஆகியோர் தங்கள் கிராமத்தில் 2 பிகாவிற்கும் குறைவாகவே வைத்திருப்பதாகக் கூறினர். “அயோத்தியில் உள்ள எந்த நிலத்தையும் பற்றி எனக்குத் தெரியாது. அத்தகைய ஒப்பந்தம் பற்றி அவர் (ரோங்காய்) எங்களிடம் கூறவே இல்லை. அவர் பல ஆண்டுகளாக அயோத்திக்கு செல்லவில்லை” என்று காப்ரைன் கூறினார்.

புகார்தாரர் மகாதேவை தொடர்பு கொண்டபோது, ​​“நிலத்தின் ஒரு பகுதியை நாங்கள் விற்றுவிட்டோம், பல ஆண்டுகளாக MRVT அதை கையகப்படுத்தவில்லை. வியாபாரிகள் நிலத்தை வாங்கியதாக கூறியபோதுதான் எங்களுக்கு தெரியவந்தது. நான் விற்காத எனக்குச் சொந்தமான பக்கத்து நிலத்தைக் கூட அவர்கள் ஆக்கிரமிக்க விரும்பினர்.

ரோங்காயின் டான் பத்ரா பற்றி கேட்டபோது, ​​MRVT இன் அறங்காவலரான சாலிக்ராம் மிஸ்ரா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார், “ரோங்காய் எங்களுடன் சில ஆண்டுகள் பணியாற்றினார். நிலத்தின் விலை உயர்வை அறிந்த மக்கள் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரச்னையை எழுப்புகின்றனர். வருவாய்த் துறையின் பல ஓய்வுபெற்ற அதிகாரிகளை நாங்கள் பணியமர்த்தியுள்ளோம், எனவே ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

தற்போது பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக இருக்கும் அனுஜ் ஜாவை தொடர்பு கொண்டபோது, ​​“நான் விசாரணைக்கு உத்தரவிட்டேன். இந்த வழக்கு தற்போது ARO (உதவி பதிவு அதிகாரி) நீதிமன்றத்தில் உள்ளது என்றார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

1990கள்: மகரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட்டளை அயோத்தியில் உள்ள கிராமங்களில் பெரும் நிலத்தை கையகப்படுத்தியது. ரோங்காய் என்ற தலித் ஊழியர் மூலம் தலித் நில உரிமையாளர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 21 பிகாக்களை வாங்கியது.

ஜூன் 3, 1996: பதிவு செய்யப்படாத நன்கொடைப் பத்திரத்தில் (டான்-பத்ரா) கையொப்பமிட்ட ரோங்காய், முழு 21 பிகாக்களையும் MRVTக்கு வழங்கினார்.

செப்டம்பர் 3, 1996: குறிப்பிடப்பட்ட நிலம் பதிவேடுகளில் MRVT பெயரில் பட்டியலிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 2019: தலித் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலம் தலித் அல்லாதவருக்கு "சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது" என்று பர்ஹாதா மஞ்சா கிராமத்தில் உள்ள தலித் கிராமவாசியான மகாதேவ், வருவாய் வாரியத்தில் புகார் அளித்தார்.

அக்டோபர் 30, 2019: வருவாய் வாரியத்தின் உத்தரவின் பேரில், அயோத்தி மண்டல ஆணையர், கூடுதல் ஆணையர் ஷிவ் பூஜன் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி கோரேலால் சுக்லா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தார்.

பிப்ரவரி 1, 2020: இரு உறுப்பினர் குழு விசாரணை அறிக்கையை அயோத்தி மண்டல ஆணையர் எம்.பி அகர்வாலிடம் சமர்ப்பித்தது.

அக்டோபர் 1, 2020: பின்னர் மாவட்ட மாஜிஸ்திரேட் அனுஜ் குமார் ஜா விசாரணை அறிக்கையை அங்கீகரித்து, "பதிவு செய்யப்படாத நன்கொடைப் பத்திரம் மூலம் (பட்டியலிடப்பட்ட சாதி நபரின்) நிலத்தை சட்டவிரோதமாக மாற்றியதற்காக" MRVT மற்றும் சில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தார்.

மார்ச் 18, 2021: பிரிவு ஆணையர் அகர்வால் விசாரணை அறிக்கையை அங்கீகரித்து மேலும் நடவடிக்கைக்காக வருவாய் வாரியத்திற்கு அனுப்பினார்.

ஆகஸ்ட் 6, 2021: ஆகஸ்ட் 22, 1996 இன் உத்தரவைச் சரிசெய்து, “கேள்விக்குரிய நிலத்தை மாநில அரசிடம் திருப்பித் தர வேண்டும்” என்று அயோத்தியில் உள்ள உதவிப் பதிவு அதிகாரி (ஏஆர்ஓ) பான் சிங்கால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh Ayodhya Temple Express Exclusive
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment