Advertisment

மசூதிகள் இஸ்லாம் சமயத்தின் ஒரு அங்கமா? என்ன சொல்கிறது உச்ச நீதிமன்றம்?

SC Refuses to Refer Ayodhya Case to 5-Judge Bench : அரசியல் சாசன அமர்விற்கு வழக்கை மாற்ற இயலாது என்று தீர்ப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாபர் மசூதி வழக்கு அரசியல் சாசன அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி வழக்கு அரசியல் சாசன அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி வழக்கு அரசியல் சாசன அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்திருகிறது. இந்தியாவில் மிகவும் சென்சிடிவாக எடுத்துக் கொள்ளப்படும் மிக முக்கியமான வழக்கின் முக்கியத் தீர்ப்பு இதுவாகும்.

Advertisment

மூன்று பேர் கொண்ட அமர்வு நீதிமன்றத்தில் 1994ம் ஆண்டு இஸ்மாயில் பரூக்கி தொடுத்த வழக்கின் தீர்ப்பினை இன்று வெளியிட்டார்கள். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபத்ஹி அசோக் பூஷன் ஒரே மாதிரியான தீர்ப்பினையும், மாறுபட்ட தீர்ப்பினை நீதிபதி அப்துல் நசீரும் வெளியிட்டனர்.

To read this story in English

1994ம் ஆண்டு தொடுத்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் குழு “இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு மசூதி அவசியம் இல்லை. எங்கும் தொழுகை நடத்திக் கொள்ளலாம். ஒரு வேளை மசூதி தேவை என்றால் அதற்காக அரசே ஒரு இடத்தினை மசூதி கட்ட வழங்கும்” என்று கூறினார்.

பாபர் மசூதி வழக்கு அரசியல் சாசன அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி மற்றும் ராமர் கோவிலுக்கான நிலப்பங்கீடு தொடர்பான வழக்குகளில் முக்கிய அங்கமாக விளங்கியது இந்த வழக்கு. 1994ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த தீர்ப்பினை எதிர்த்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வழக்கு தொடுத்தனர்.

மேலும் இந்த வழக்கினை அரசியல் சாசன அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இந்த வேண்டுகோளை இரண்டு நீதிபதிகள் நிராகரித்து தீர்ப்பு வழங்கினர். அயோத்தி வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வருகின்ற அக்டோபர் 29ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Babri Masjid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment