Advertisment

புத்தகம் கிழிப்பு; நீதிபதி கோபம்! - அயோத்தி வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பதட்டமான சூழல் நிலவுகின்ற காரணத்தால் டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayodhya Ram Mandir - Babri Masjid case hearing must conclude at 5 pm says CJI

Ayodhya Ram Mandir - Babri Masjid case hearing must conclude at 5 pm says CJI

Ayodhya Ram Mandir - Babri Masjid case hearing : அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் தொடர்ந்து பல மட்டங்களிலும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராம் ஜென்ம பூமியை சொந்தம் கொண்டாட மூன்று தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடர் விசாரணையாக நடைபெற்று வருகிறது அயோத்தி வழக்கு.

Advertisment

40 நாட்கள் விசாரணை இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் இதன் அனைத்து வாதங்களையும் இன்று மாலை 5 மணிக்குள் முடித்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவுறுத்தினார். இந்த வழக்குகளை எஸ்.ஏ. போப்டே, சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதன்படி இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. அனுமதி அளிப்பு அப்போது பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்கனவே போதுமான விசாரணையை நடத்திவிட்டோம். அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க நேரம் அளிக்கிறோம், வாதங்களை தொடரலாம் என்றார்.

இதையடுத்து வாதங்களை அனைவரும் முன்வைத்தனர்.

இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடுகையில், ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நீண்ட கால நம்பிக்கை. உலகில் ராம ஜென்ம பூமி அயோத்தியில் மட்டுமே இருக்கிறது. எனவே, அங்கு மட்டுமே இந்துக்களால் ராம ஜென்ம பூமி என்ற பிணைப்புடன் வழிபட முடியும். முஸ்லீம்கள் தொழுகை செய்ய வேறு நிறைய இடங்கள் உள்ளன. குறிப்பிட்ட இந்த இடத்தையே தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. 1857 முதல் 1934 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லீம் தரப்பு வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தியது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. அதன்பிறகு அவர்கள் எந்த பிரார்த்தனையையும் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்றார்.

இதையடுத்து இந்து அமைப்பினர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிஷோர் குணால் எழுதிய 'அயோத்தியா மீள்பார்வை' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன், இந்த நீதிமன்றம் ஏதோ ஒரு புத்தகத்தை சாட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக்கூறி எதிர்தரப்பு அளித்த புத்தகத்தை கிழித்தார்.

ராஜீவ் தவானின் இந்த செயலால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி 'மிக முக்கியமான வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் இப்படி நடந்துகொள்வது முறையல்ல. இதேநிலை தொடர்ந்தால் விசாரணையைத் தொடராமல் நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம்' என்றார். மேலும் வழக்கறிஞர்கள் கொடுக்கும் எழுத்துபூர்வமான சாட்சியங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதை விடுத்து நீதிமன்றத்தில் குரலை உயர்த்திப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எச்சரித்தார்.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமரச குழுவும் தங்கள் வாதங்களை தலைமை நீதிபதி அமர்வு முன்பு வைத்தது. அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் அயோத்தி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதன் லைவ் அட்பேட்டினை ஆங்கிலத்தில் படிக்க

Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment