அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை அடுத்து, ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கோயில் தளத்தில் பூமி பூஜையை மேற்கொள்ள உள்ளது.
“பூமி பூஜையின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வேண்டும். அதன் பொருட்டு, ஆகஸ்ட் 3,5 ஆகிய இரண்டு தேதிகளை பிரதமருக்கு அனுப்பியுள்ளோம். இதில், பிரதமர் ஏதேனும் ஒரு நாளை தேர்வுய் செய்யலாம்” என்று ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்தது.
அயோத்தியில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காமேஷ்வர் சவுபால் (அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ள 15 உறுப்பினர்களில் ஒருவர்) “எல்லை நிலைமை, கொரோனா பெருந்தொற்று ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சரியாக இருக்கும் என்று பிரதமர் கருதும் போது கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார் .
ராமர் கோயிலின் பூமி பூஜை பிரதமரால் செய்யப்பட வேண்டும் என்று முழு நாடும் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
தற்செயலாக, சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததன் ஒரு ஆண்டு நினைவை ஆகஸ்ட்-5 குறிக்கிறது.
முன்னதாக, அபோதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிர்பந்தம் காரணமாக, சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு, அயோத்தியில் ராமர் கோயில் ஆகிய இரண்டு சிந்தாந்த ரீதியிலான நடவடிக்கையை அடல் பிஹாரி வாஜ்பாய் முன்னெடுத்து செல்லமால் இருந்தார்.
நவம்பர் 2019 இல், 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி தளத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்தது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், “எல் அண்ட் டி நிருவனம்,கட்டுமான சோதனைகளுக்காக 60 அடி ஆழத்தில் இருந்து மண்ணை சேகரித்து வருவதாக” தெரிவித்தார்.
மேலும், “பூமி பூஜைக்கு கலந்து கொள்ளுமாறு பிரதமர் அவர்கள் கோரியுள்ளோம், அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் தேதிகளை பரிந்துரைத்தார். எவ்வாறாயினும், இறுதி முடிவு பிரதமரின் முடிவாக இருக்கும்” என்றும் கூறினார்.
சனிக்கிழமை, அயோத்தியில் நடந்த அறக்கட்டளையின் கூட்டத்தில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், நான்கு உறுப்பினர்கள் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் இணைந்தனர்.
கட்டுமான இடத்தில் 35-40 அடி குப்பைகள் சமன் செய்யப்பட்டுள்ளதாக சம்பத் ராய் தெரிவித்தார். “லார்சன் மற்றும் டூப்ரோ 60 அடி ஆழத்தில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து வருகின்றனர். மேலும், மண்ணின் வலிமை அடிப்படையில், கோயிலின் அஸ்திவாரத்திற்கான வரைபடங்கள் தயாரிக்கப்படும் ”என்றார்.
சம்பத் ராய் மேலும் கூறுகையில், “கோயிலுக்கு தேவையான கற்களை பெறுவது குறித்தும், வடிவமைப்புகளைத் தயாரிப்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா 1990 இல் பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கினார். எனவே, சந்திரகாந்த் சோம்புரா தனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மார்ச் 25 ம் தேதி, அயோத்தியின் ராமஜென்ம பூமியில் மிக பிரம்மாண்டமாய் எழுப்பப்படும் கோவிலுக்கு அருகே தற்காலிகமாக கோவில் ஒன்று எழுப்பப்பட்டு, ராம்லல்லா சிலையை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு மாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil