Advertisment

சிறையில் உள்ள ஆஸம் கானுக்கு அதிகரித்து வரும் ஆதரவு

சமாஜவாதி ஆட்சிக்கு மீண்டும் வந்தால், ஆஸம் கான் சிறையில் இருந்து வெளியே வருவார். அதனால், நில அபகரிப்பு மீண்டும் அதிகரிக்கும். அவரை போன்றவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

author-image
WebDesk
New Update
சிறையில் உள்ள ஆஸம் கானுக்கு அதிகரித்து வரும் ஆதரவு

ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சௌத்ரி அக்கட்சியின் மற்றொரு முக்கியப் பிரமுகர் பிரகதிஷீல் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சிவ்பால் சிங் யாதவ் ஆகியோர் ஆஸம் கானை சிறையில் சென்று சந்தித்தனர்.

Advertisment

சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக 81 வழக்குகளில் சிறையில் உள்ளார்.

சமீபத்தில் அவரை சமாஜவாதி கட்சியின் எம்எல்ஏ ரவிதாஸ் மெஹ்ரோத்ரா சந்தித்துப் பேசினார்.

அகிலேஷ் யாதவின் உத்தரவின்பேரில் தான் சென்று பார்த்ததாக மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.

முன்னதாக, முஸ்லிம் சமூகம் தொடர்பான பிரச்னைகளில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மௌனம் சாதிப்பதாக ஆஸம் கானின் ஊடகப் பொறுப்பாளர் ஃபசஹத் அலி கான் குற்றம் சாட்டினார்.

மேலும், ஆஸமை சிறையில் இருந்து விடுவிக்க அகிலேஷ் முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதன்மூலம், இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

தனது தந்தை முலாயம் சிங் யாதவின் சமகாலத்தவர்களான ஆஸம் போன்றவர்களை கட்சியில் ஓரங்கட்டிவிட்ட அகிலேஷ், தற்போது ஆஸம் கான் முக்கியமான தலைவர் என்பதை உணர்ந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அகிலேஷுடன் முரண்பட்டு நிற்கும் அவரது உறவினர் சிவ்பால் யாதவ், ஆஸம் கானை சிறையில் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ஆஸம் கான் போன்ற முக்கியமான தலைவர்களுக்கு சமாஜவாதி

ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேநேரத்தில், பாஜகவின் முக்கிப் பிரமுகரான பிரிஜ் பூஷன் சரண், ஆஸம் கானை மக்கள் தலைவர் என்று புகழ்ந்துள்ளார்.

மேலும், வாய்ப்பு கிடைத்தால் அவரை சிறையில் சென்று சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் கிருஷ்ணம், ஆஸம் கானை சந்தித்தார்.

"ஆஸம் கான் அடக்குமுறைகளை எதிர்கொண்டிருக்கிறார். அவருடைய உடல்நலம் குறித்து அறிந்துகொள்ள நான் இங்கு வந்தேன். அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அவரை மீண்டும் சந்தித்து, அரசியல் பேசுவேன்'' என்றார் பிரமோத் கிருஷ்ணம்.

இதனிடையே, ஆஸம் கானின் செய்தித்தொடர்பாளர் ஃபசாகத் அலி கூறுகையில், சமாஜவாதி தலைமை குறித்து நான் தெரிவித்த கருத்துகளுக்கு பிறகு, என்னை எந்தவொரு சமாஜவாதி தலைவர்களும் அணுகவில்லை என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களில் ஆஸம் கானை பாஜக கடுமையாகத் தாக்கி பேசியிருந்தது.

2012-2017 காலகட்டத்தில் அதாவது உத்தரப் பிரதேசத்தில் இந்த காலகட்டத்தில் சமாஜவாதி ஆட்சி நடைபெற்ற போது, நில அபகரிப்பு நடந்ததாக பாஜக குற்றம்சாட்டியது.

சமாஜவாதி ஆட்சிக்கு மீண்டும் வந்தால், ஆஸம் கான் சிறையில் இருந்து வெளியே வருவார். அதனால், நில அபகரிப்பு மீண்டும் அதிகரிக்கும். அவரை போன்றவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும்.

நிலத்தில் ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் அமைய வேண்டும் என்று தேர்தல் பிரசாரங்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்தார்.

பிரசாந்த் கிஷோர் அறிக்கை ஏற்பு; காங்கிரஸ் மறுமலர்ச்சிக்கு 6 குழுக்களை அமைத்த சோனியா காந்தி

ஆஸம் கான், உத்தரப் பிரதேசத்தில் மிக முக்கியமான முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இவர் சிறையில் இருப்பது தொடர்பாக அடுத்தகட்ட செயல்முறைகளை கவனித்து வருவதாக பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் தெரிவித்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Written by Lalmani Verma 

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment