கொரோனாவுக்கு முத்த மருத்துவம்… பரிதாபமாக உயிரைவிட்ட சாமியார் !

தன்னுடைய பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தொற்றில் இருந்து காப்பாற்றும் அதி அற்புத மருந்தாக எண்ணி, கையில் முத்தம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

By: June 13, 2020, 12:09:02 PM

‘Baba’ who claimed to treat COVID-19 by kissing hand succumbs to virus  :  மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாமியார் ஒருவர் கொரோனாவை குணப்படுத்த ஒரு யுத்தியை கண்டறிந்தததாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் குணம் அடைய வேண்டுமென்றால் அவரிடம் போய் முத்தம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம்.  ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் தன்னுடைய பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தொற்றில் இருந்து காப்பாற்றும் அதி அற்புத மருந்தாக எண்ணி, கையில் முத்தம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதனால் கொரோனா குறைந்ததா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு பக்தரிடம் இருந்து இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. கடந்த மூன்றாம் தேதி அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற இயலவில்லை. இந்நிலையில் அவரிடம் முத்த அருள்வாக்கு வாங்கிச் சென்ற பக்தர்கள் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களால் இயன்ற அளவு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் சில சாமியார்கள் இப்படியான காரியங்கள்ளில் ஈடுபட்டு, சுகாதாரத்துறைக்கு மேலும் அதிக அழுத்தத்தை தான் தருகிறார்கள். ஏற்கனவே ஒடிசாவில் கொரோனா நோய் ஒழிய வேண்டும் என்று பக்தர் ஒருவரை நரபலி கொடுத்தார் சாமியார். அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீண்டு வரவே நாட்கள் ஆகும். இதில தற்போது இந்த செய்தியும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Baba who claimed to treat covid 19 by kissing hand succumbs to virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X