Advertisment

பாபர் மசூதி வழக்கு: 32 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய ஏ.ஐ.எம்.பி.எல்.பி முடிவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 32 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சையத் காசில் ரசூல் இலியாஸ் கூறினார்.

author-image
WebDesk
New Update
Babri Masjid demolition case, babri masjid demolition updates, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, india news, indian express, AIMPLB, supreme court, ayodhya, cbi court news, Tamil indian express

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 32 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சையத் காசில் ரசூல் இலியாஸ் கூறினார்.

Advertisment

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது என்று வாரியத்தின் அலுவலக உறுப்பினர் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த வழக்கில் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை செப்டம்பர் 30, 2020-இல் சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இதைத் தொடர்ந்து அயோத்தியைச் சேர்ந்த ஹாஜி மஹ்பூப் மற்றும் சையத் அக்லக் ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி மறுசீராய்வு மனுவை நிராகரித்தது. மேலும், மேல்முறையீடு செய்தவர்கள் வழக்கில் பாதிக்கப்படாததால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை என்று கூறினர்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினரும், வாரியத்தின் செய்தித் தொடர்பாளருமான சையத் காசில் ரசூல் இலியாஸ், 32 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு குற்றச் செயல் என்பதை அயோத்தி தீர்ப்பில் உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளதால், நாங்கள் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று சையத் காசில் ரசூல் இலியாஸ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, பாபர் மசூதி இடிப்பு சட்டத்தின் ஆட்சியை கடுமையாக மீறுவதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சட்டத்தின் பிடிக்கு வெளியே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்த ஹாஜி மஹ்பூப் மற்றும் சையத் அக்லக் ஆகியோர் சி.பி.ஐ சாட்சிகள் என்றும், அங்கே கூடியிருந்த ஒரு கும்பலில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி அவர்களது வீடுகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மஹ்பூப்பும் அக்லக்கும் பாபர் மசூதிக்கு அருகாமையில் வசித்து வந்தனர்.

சி.பி.ஐ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மஹ்பூப் மற்றும் அக்லக் ஆகியோர் 2021 ஜனவரி 8-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம், “இந்த வழக்கில் வாங்களின் அடிப்படையில், வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் கீழ், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 372 கீழ், மேல்முறையீட்டு மனுதாரர்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட உடனடி குற்றவியல் மேல்முறையீட்டு மனு செய்பவர்களின் வீடு, இருப்பிடம் அந்த இடத்தில் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். செப்டம்பர், 30, 2020 தேதியிட்ட தீர்ப்பு, உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்பவர்களின் இருப்பிடம் அந்த இடத்தில் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது.” என்று உத்தரவிட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Supreme Court Babri Masjid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment