Advertisment

காடுகளை 'அபேஸ்’ செய்த எம்.எல்.ஏவுக்கு வனத்துறை அமைச்சர் பதவி... எடியூரப்பாவின் திட்டம் தான் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காடுகளை 'அபேஸ்’ செய்த எம்.எல்.ஏவுக்கு வனத்துறை அமைச்சர் பதவி... எடியூரப்பாவின் திட்டம் தான் என்ன?

 Johnson T A

Advertisment

Ballari baron Anand Singh made Karnataka Forest Minister : சட்டத்திற்கு புறம்பாக சுரங்கம் அமைத்தல் மற்றும் காடுகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் போன்ற நடவடிக்கைகளால் குற்றம் சாட்டப்பட்டவர் பெல்லாரி ஆனந்த் சிங். அவர் மீது 2012ம் ஆண்டு 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனிங் மற்றும் போக்குவரத்து துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் ஆனந்த் சிங் நான்கு முறை எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டவர். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்து 6 மாதங்கள் ஆன நிலையில் பெல்லாரி ஆனந்த் சிங் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

To read this article in English

முதலில் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையின் அமைச்சராக சிங் 10ம் தேதி நியமிக்கப்பட்டார். பிறகு ஒரே நாளில் அவருக்கு காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 - 13 ஆண்டுகளில் காடுகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட போதிலும் அவரின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

விஜயநகர தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட உணவுத்துறையில் பணியாற்ற அவருக்கு விரும்ப்பம் இல்லை. அதனால் அவர்கள் வனத்துறையினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு இணங்க இவருக்கு இந்த துறை வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக தரப்பு அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலமாக எம்.எல்.ஏ ஆன இவர் தன்னுடைய சொத்து மதிப்புகளாக ரூ. 173 கோடியை தேர்தல் ஆணையத்திடம் அறிவித்துள்ளார். அவர் மீது 3 சி.பி.ஐ வழக்குகள் உள்ளது. பாஜக அமைச்சர் கலி ஜனார்தனன் ரெட்டி தலைமையில் முறையான அனுமதி பெறாமல் சுரங்கம் அமைத்தது தொடர்பாக இவர் மீது வழக்குகள் உள்ளது. இந்த இரண்டு நபர்களாலும் கர்நாடகா கருவூலத்திற்கு ரூ. 200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

ஏமாற்றுதல், திருட்டு, ரகசிய திட்டங்கள், சட்டத்திற்கு புறம்பாக காடுகளில் நுழைதல் மற்றும் ஃபோர்ஜரி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெல்லாரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருந்த இவர் 2009 ஜனவர் 1 முதல் 2010 மே 31 வரையில் ஜனார்தனன் ரெட்டியுடன் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக இரும்பு தாதுக்களை, முறையான அனுமதி ஏதும் இன்றி வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. சி.பி.ஐயால் ஆனந்த் கைது செய்யப்பட்டு 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 2008 முதல் 2013 ஆண்டு வரை, பாஜக ஆட்சியின் போது, இவர் செய்த குற்றங்களுக்காக 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 11 வழக்குகளை சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்தது. மீண்டும் அவர் இந்த விசாரணைக் குழுவால் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மீண்டும் பெயிலில் வெளியே வந்தார்.

ஆனந்துடன் இந்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட சுரங்க தொழில் அதிபர் தினேஷ் சிங்கி தற்போது கர்நாடக மாவட்டத்தின் வனத்துறை மையத்தின் உறுப்பினராக உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறி பி.எஸ்.எடியூரப்பா மீறியுள்ளார்.  அமைச்சர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவரை மீண்டும் அமைச்சராக நியமிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது என்று சமூக செயற்பாட்டாளர் எஸ்.ஆர். ஹையர்மேத் மேற்கோள்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க : பார்க்கும் போதே பரவசம்… ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்ப்பினை தரும் வைல்ட் கர்நாடகா!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment