போலி ஏடிஎம் மூலம் ரூ.1 கோடி மோசடி – வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேர் கைது

Bank fraud - manager arrested : போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து ரூ1.13 கோடி மோசடி செய்த விவகாரத்தில், காஜியாபாத் போலீசார், வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.

By: September 29, 2019, 1:49:38 PM

போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து ரூ1.13 கோடி மோசடி செய்த விவகாரத்தில், காஜியாபாத் போலீசார், வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்தவர் தய்யீப் கான். விவசாயம் செய்துவரும் தய்யீப், தஸ்னா பகுதியில் உள்ள யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருந்தார். இவரது விவசாய நிலத்தை சமீபத்தில் விற்பனை செய்திருந்தார். இதன்மூலம், இவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் இவரது வங்கிக்கணக்கில் பணம் இருந்தது.
இவரது வங்கிக்கணக்கு உடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்த போதிலும், குறுந்தகவல், பேலன்ஸ் செக் உள்ளிட்ட சேவைகள் கிடைக்கப்படாமலேயே இருந்தன.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுனில் திவாரி மற்றும் சூரஜ் மண்டல், போலி ஏடிஎம் கார்டு தயாரித்து, அவர்களுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி, தய்யீ்ப் கானின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1.13 கோடி மோசடி செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, கடந்த ஜூலை மாதத்தில், தய்யீ்ப் கான் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படியில் மண்டல் மற்றும் திவாரி கைது செய்யப்பட்டனர்.

வங்கி ஊழியர்களின் துணையில்லாமல், இவர்களால் இந்த மோசடியை செய்திருக்க முடியாது என்பதனடிப்படையில், போலீசார் விசாரணையை மேலும் தொடர்ந்தனர். இந்த மோசடியில், இவர்ளுக்கு வங்கி மேனேஜர் பிரதிபா ஜெயின் உதவியிருப்பது தெரிந்தது.பிரதிபா ஜெயின், தற்போது டில்லி திலக் நகர் கிளையில் மேனேஜராக பணியாற்றி வந்தார். டில்லி போலீசாரின் உதவியுடன் காஜியாபாத் போலீசார் பிரதிபா ஜெயினை கைது செய்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Bank manager arrest %e2%82%b91 13 crore duplicate atm card

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X