Advertisment

அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உ.பி. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி சந்திப்பு

உச்சநீதிமன்றம் இன்று சனிக்கிழமை அமர்வை அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரியையும் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோரையும் தனது நீதிமன்ற அறையில் சந்தித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உ.பி. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி சந்திப்பு

இந்தியாவின் மிக முக்கியமான ஒரு வழக்கில் சனிக்கிழமை காலை முடிவு தெரிய உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கில் 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு விசாரணையில் தீர்ப்பளிக்கின்றனர்.

Advertisment

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோரைக் கொண்ட அமர்வு அக்டோபர் 16, 2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் 40 நாட்கள் அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர் அக்டோபர் 16 ஆம் தேதி தீர்ப்பு அறிவிப்பதாக ஒதுக்கிவைத்தனர்.

2.77 ஏக்கர் பரப்பளவில் சர்ச்சைக்குரிய அயோத்தி தளத்தை மூன்று பாகமாக பிரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிர்மோஹி அகாரா பிரிவு, சாமி ராம்லல்லா விராஜ்மான் மற்றும் உ.பி. சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கும் வழங்கியது.

வெள்ளிக்கிழமை, உச்சநீதிமன்றம் இன்று சனிக்கிழமை அமர்வை அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரியையும் டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் ஆகியோரையும் தனது நீதிமன்ற அறையில் சந்தித்தார்.

நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட மாநிலத்தின் இரண்டு உயர் அதிகாரிகளும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடுகள் தொடர்பாக அமர்வு தனது உத்தரவை ஒதுக்கியவுடன், நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை எழுத ஐந்து வாரங்களுக்கும் குறைவான கால அவகாசம் இருந்தது. ஏனெனில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் வாதங்களின்போது, 1993 ஆம் ஆண்டில் சுவாமி ராம்லல்லா விராஜ்மான் தரப்பினர் சர்ச்சைக்குரிய இடத்திற்கும் அருகிலுள்ள கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கும் உரிமை கோரினர். மேலும், அவர்கள் அருகிலுள்ள நிலமும் இந்துக்களுக்கு முக்கியமானது என்றும் முன்மொழியப்பட்ட ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இது தேவைப்படும் என்று கூறினர்.

மறுபுறம், முஸ்லிம் தரப்பினர் இந்த வழக்கில் அதன் தீர்ப்பு நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்று அமர்வை வலியுறுத்தினர். நீதிபதிகள் அமர்வு “நிவாரணத்தை உருவாக்குவதில், அதை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் நம்முடைய பல மத மற்றும் பல கலாச்சார விழுமியங்களை நிலைநிறுத்துகிறது” என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Delhi Uttar Pradesh Ayodhya Temple Supreme Court Supreme Court Of India Justice Ranjan Gogoi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment