தேச விரோதிகளை வீழ்த்த வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் வலம்வந்த குறுஞ்செய்தி,ஞாயிற்றுக்கிழமையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் பெரிய வன்முறையை எற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
மொபைல் எண்களில் இருந்து அச்சுறுத்தும் குறுஞ்செய்திகளை சில குரூப்களில் பகிர்ந்த ஆறு நபர்களை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் தொடர்பு கொண்டது.
தொடர்பு கொண்ட ஆறு நபர்களில், மூன்று பேர் இந்த குறுஞ்செய்தியை பரப்ப வேறு யாராவது தங்கள் எண்ணை “தவறாக” பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறினர். ஒருவர் தனது “நண்பர் செய்தியை வெளியிட்டார்” என்றும், மேலும் இருவர் “தகவல்களை சேகரிக்க ” அந்த வாட்ஸ்அப் குரூப்பில் நுழைந்ததாகவும் கூறினர்.
வாட்ஸ்அப் குரூப்பில் ஒருவர், ” நிச்சயமாக,அவர்களிடம் சரியான கொடுத்தல் வாங்கல் வேண்டும். இப்போது அவர்களை வெல்ல முடியாவிட்டால், நாம் எப்போது முடியும்? அவர்களை வெல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார். அந்த நபரை தொடர்பு கொண்டபோது, “நான் சர்வதேச ஆய்வில் பி.எச்.டி படிக்கும் ஜே.என்.யூ மாணவர். ஆம், நான் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவன் தான் . ஊடகவியலாளர்கள் இந்த பல்கலைககழகத்தின் புனிததத்தை களங்கப்படுத்துகிறார்கள்” என்றார்.
மீண்டும் அவரிடம் தொடர்பு கொண்டபோது” நான் அந்த பல்கலைக்கழக மாணவன் தான், ஆனால் நான் அந்த வன்முறை தூண்டும் செய்திகளை நான் வெளியிடவில்லை. எனது மொபைல் போனை யாரோ தவறாகப் பயன்படுத்தினர்,” என்றும் தெரிவித்தார்.
‘லெஃப்ட் தீவிரவாதம் டவுன் டவுன்’ என்ற வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள ஒருவர் “. இந்த துரோகிகளை வேட்டையாடியது மிகவும் வேடிக்கையானது, நாங்கள் ஜே.என்.யுவில் மிகவும் தற்போது மிகவும் ஜாலியாக இருக்கிறோம்” என்றொரு குறுந்தகவலை வெளியிட்டார்.
அவரை தொடர்பு கொண்டபோது, நான் ஹரியானாவைச் சேர்ந்த கல்லூரி மாணவன். ஜே.என்.யுவில் இடது பயங்கரவாதம் குறித்த ஊடக செய்தியை நாங்கள் தொலைகாட்சியில் கண்டவுடன், அருகில் இருந்த நண்பர் எனது தொலைபேசியை எடுத்து, லெஃப்ட் தீவிரவாதம் டவுன் டவுன் என்ற குழுவில் சேர்ந்து இந்த குறுந்தகவலை வெளியிட்டதாக கூறினார்.
நான் அவரை கண்டித்தேன். நான் அரசியல் ரீதியாக ஜவஹர்லால் நேரு மாணவர்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே ஜே.என்.யூ மாணவர்கள் தேச விரோதிகளா? இல்லையா? என்பதும் எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
“அவர்களின் விடுதிகளுக்குள் நுழைந்து அவர்களை அடிப்போம்” என்று பதிவிட்ட நொய்டாவை சேர்ந்த மற்றொரு நபரை தொடர்புகொண்டபோது, எனது எண்ணை உங்களுக்கு யார் கொடுத்தது? தொலைபேசியைத் துண்டியுங்கள் ,என்று கூறி அழைப்பையும் துண்டித்தார்.
ஜே.என்.யூவில் அரங்கேறிய கொடூர வன்முறை… புகைப்படத் தொகுப்பு இங்கே!
‘இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை‘ என்ற வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த மற்றொரு நபர், வளாகத்தில் வன்முறையை ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்த தகவல்களை இரகசிகமாக தெரிந்து கொள்ள இந்த குரூப்பில் சேர்ந்திருப்பதாகக் கூறினார்.
நான் இப்போது எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறேன். நான் ஒரு ஜே.என்.யூ மாணவன் இல்லை , இருந்தாலும் நான் என் தோழர்களுடன் நிற்கிறேன். நான் சில அடிப்படை தகவல்களுக்காக இந்த குரூப்பில் சேர்ந்தேன்.
பின்னர், அவர்கள் என்னை அகற்றினர். இந்த குரூப்பிற்கான இணைப்பு என்னுடன் யாரோ ஒருவர் பகிர்ந்து கொண்டார், என்று கூறி , ஏபிவிபி அமைப்பிற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பதை உணர்த்தினார்.
மற்றொரு நபர், “இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை” என்ற குரூப்பின்,பெயரை ஒரு கட்டத்தில் “சங்கி குண்டர்கள் டவுண் டவுண் ” என்று மாற்றியதால், அந்த குரூப்பில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
தொடர்பு கொண்டபோது,“நான் கேரளாவைச் சேர்ந்தவன். யாரோ ஒருவர் என்னை குழுவில் சேர்த்தனர். நான் ஏபிவிபி அமைப்பை மிகவும் கடுமையாக எதிர்ப்பவன் . வன்முறையுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. உண்மையில், எனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அந்த குரூப்பின் பெயரை மாற்றியதாகவும் கூறினார்.
மற்றொரு நபர் ஒரு குரூப்பில் “அவர்களை அடியுங்கள் ” என்று எழுதிய ஒருவரை தொடர்பு கொண்டபோது, ”நான் ஒரு ஜே.என்.யூ மாணவர் அல்ல. நான் அசாம்கரைச் சேர்ந்தவன். அந்த குரூப்பில் எனது எண் எவ்வாறு சேர்க்கப்பட்டது, யார் செய்தியை வெளியிட்டார் என்பதும் எனக்குத் தெரியாது,”என்றார்.