Advertisment

அன்பின் முகவரியாய் ஸ்ரீ அரவிந்தர் - அவரின் ஆன்மிகம் மற்றும் அரசியல் பார்வை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரவிந்தர்

அதிரிஜா ராய்சௌத்ரி

Advertisment

விமர்சனங்கள் அமைதியாகின. கோபங்களும் வன்முறைகளும் முடிவுக்கு வந்தன. அவர் இறப்பிற்கு அவரின் கவிதைகள் தேசத்தின் பற்றை பறை சாற்றுகின்றன. அன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர். அவர் இறந்து பல ஆண்டுகள் ஆனப் பின்பும் அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் இந்தியா மட்டுமின்றி கடல்கள் தாண்டியும் எதிரொலிக்கிறது. 

அரவிந்தர் என்ற பெயரும் அவரின் சித்தாந்தங்களும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு வங்கம் எங்கும் பரவி இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. காரணம் சுதேசி இயக்கத்தில் அரவிந்தரின் பங்கு அத்தனை இன்றியமையாதது. இன்றைய பாடப் புத்தகங்களும் அவர் நாட்டிற்காக செய்த அரும்பணியை இன்றும் நினைத்து பெருமை கொள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகள் கழித்து இன்று அரவிந்தரின் சித்தாந்தங்கள் எப்படி பார்க்கப்படுகிறது?

சுகதா போஸ் தன்னுடைய கட்டுரை ஒன்றில் “கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகால ஆசிரியப் பணியில் இருந்த பின்பு தான் அரவிந்தரின் அரசியல் கொள்கைகளை மற்றவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுத்துவிட்டனர் என்பது புரிந்தது” என்று எழுதியிருக்கிறார். ஆனால் அரவிந்தர் நாட்டுக்கு அளித்த அரசியல் பங்களிப்புகள் பற்றி இன்றும் பலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கிறது.

இன்றைய கல்வி சூழல் முழுக்க முழுக்க மேற்கு உலகங்களின் கைகளுக்குள் அடங்கிப் போயிருக்கிறது. அதனால் தான்  இந்தியாவின் அரசியல் கொள்கைகளை மீட்டெடுப்பது என்பது நமக்கு சவாலான காரியமாக இருக்கிறது.  இந்த கொள்கைகளை மீட்டெடுப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களில் அரவிந்தரும் ஒருவர். சிபாஜி பந்தியோபத்யாய் மற்றும் சஞ்சய் பல்சிகர் போன்றவர்கள் இவரின் கொள்கைகளை ஆராய்ச்சி செய்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். பகவத் கீதை மீது அரவிந்தரின் கொள்கைகள் எப்படியான தாக்கத்தினை உருவாக்கியது என்று ராகுல் கோவிந்த் என்ற வரலாற்றாசிரியர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

ஆகஸ்ட் 15ம் தேதி, 1872ம் ஆண்டு கல்கத்தாவில் இருக்கும் கயாஸ்தா குடும்பத்தில் பிறந்தார் அரவிந்தர். இங்கிலாந்தில் இருக்கும் கிங்ஸ் கல்லூரியில் படிப்பினை முடித்தார். கேம்ப்ரிட்ஜ் மஜ்லிஸ் என்ற போராட்டத்தில் இந்திய மாணவர்களுடன் இத்தாலி மற்றும் ஐரிஷ் நாட்டு மாணவர்கள் பங்கேற்றனர். தேசியவாதம் தொடர்பான நிகழ்வில் அரவிந்தர் பங்கேற்றது அதுவே முதல்முறை. ஆனாலும் இந்தியா வந்த பின்பு தான் அரவிந்தர் மிகவும் துடிப்புடன் விடுதலை போராட்டங்களில் பங்கேற்றார். இளைஞர்களுடன் இணைந்து புரட்சிப் பாதைக்கு வித்திட்டார். அங்கு தான் அரவிந்தர் இளைஞர்கள் அனைவரையும் நம் தாய் நாட்டிற்காக தியாகம் செய்யச் சொன்னார்.

புரட்சிவாத அரவிந்தர்

கிருஷ்ணனின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு செயல்படும் அர்ஜுனாவைப் போல், எப்போதெல்லாம் சுதந்திர போராட்டம் தொடர்பான தேவைகளும் தீர்ப்புகளும் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அரவிந்தர் உற்சாகமாக மிகவும் வியப்புடன் செயல்பட்டார்.

அரவிந்தரின் அரசியல் வாழ்வானது 1890ம் ஆண்டு தொடங்குகிறது. சுதேசி இயக்கத்தில் 1900ஆம் ஆண்டு துடிப்புடன் மக்களோடு களத்தில் இறங்கிப் போராடத்துவங்கினார்.

தாய்நாட்டைத் தவிர வணங்குவதற்கு வேறொரு பொருளும் அரசியலில் தேவையில்லை. அரசியல் என்பது விடுதலை மையத்தை நோக்கி நகர வேண்டும். அதில் நல்லது கெட்டது என்று எதுவும் தேவையில்லை. அரசியல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.

வந்தே மாதரம் என்ற பத்திரிக்கையில் “புறக்கணிப்பு” பற்றிய கட்டுரை ஒன்றினை எழுதினார் அரவிந்தர். அதில் ஒரு நாட்டின் சுதந்திரத்திற்காக ஒருவர் உடம்பில் ரத்தம் ஓடுவதை பார்ப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம் என்று எழுதியிருக்கிறார்.

சுதந்திரத்தை அடைவதற்கு வன்முறையும் சரி அகிம்சையும் சரி இரண்டுமே அவர் பின்பற்றிய வழிமுறைகளே தவிர, அதற்கு மத்தியில் அவருடைய மதம் சார்ந்த கொள்கைகள் இடம் பெறவில்லை என எம்.கே ஹால்டர் தெரிவித்திருக்கிறார்.

1902ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அரவிந்தர் நடத்திய இயக்கங்கள் பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு பெரும் சவாலாக அமைந்தது. 1908ம் ஆண்டு அனுசீலன் சமிதி, அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டது.

அரவிந்தரும் ஒரு வருடம் சிறை வாசம் அடைந்தார். அதன் பின்பு அவருடைய அரசியல் சித்தாந்தங்கள் மாறத் தொடங்கின. ஆன்மிகரீதியில் அவருடைய கொள்கைகள் உருமாறத் தொடங்கின. நான் தொடர்ந்து  விவேகானந்தரின் குரலை சிறையில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவருடைய இருப்பினை என்னால் உணர முடிகிறது. மேலும் தியானத்தின் சிறப்பை என்னால் உணர முடிகிறது என்று தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆன்மிகப் பாதையில் அரவிந்தர்

வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் அரவிந்தர் மட்டுமே முதல் விடுதலை போராட்ட வீரர் அரசியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் முனைப்பில் போராட்டாத்தை தொடங்கியவர். பக்கிம் சந்திர சாட்டர்ஜி வந்த பின்பு தான் இந்திய அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டத்தில் ஆன்மிக மரபு உருவானது என்று நீங்கள் கூறலாம். அவரைத் தொடர்ந்து பின்பு விவேகானந்தர் வந்தார் என்றும் கூட கூறுபவர்கள் உண்டு. ஆனால் அரவிந்தரின் வருகைக்குப்பின்பு தான் இந்தியாவின் அரசியல் தாக்கத்தில் ஆன்மிகம் என்பது மிக முக்கிய பங்காக கணக்கில் கொள்ளப்பட்டது.

அரவிந்தர் அவருடைய படைப்புகளில் கீதாச்சாரம் மற்றும் உபநிடதங்களில் இருந்து தான் என்னுடைய தத்துவத்தை நான் கண்டடைகிறேன். ஆனால் தேவி இதைப் பற்றி கூறுகையில் அரவிந்தர் ஒரு தத்துவ ஞானி அவர் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சாராதவர் என்று கூறியுள்ளார். அரவிந்தர் தன்னுடைய தத்துவங்களை விளக்கிக் கூறுகையில் உபநிடதங்கள் வேதங்களில் இருந்து உருவானவை. வேதங்கள் எந்த ஒரு சமயத்தையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல என்பார். அவைகள் அனைத்தும் தத்துவம் சார்ந்த நூல்கள். அந்நூல்களைப் பின்பற்றி மதங்கள் மிகவும் பிற்காலத்தில் தான் உருவானது. அவர் பகவத் கீதை மட்டும் படிப்பதில்லை. அவர் ஹோமர் மற்றும் இதர ஐரோப்பிய தத்துவ மரபுகளையும் படித்துக் கொண்டிருந்தார். அவர் புத்தர் பற்றியும் பேசுவார். அவர் மதங்களைக் கடந்த ஆன்மிகவாதியாகவே திகழ்ந்தார்.

ஆன்மிகம் என்பது விடுதலையின், அரசியலின் ஒரு நெறிமுறையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதில் மிகவும் முக்கியமானது தர்மம். அதே சமயத்தில் அரசியலில் இருந்து ஆன்மிகம் வெளியில் எடுக்கப்பட்டாலும், அரசியலில் இருந்து நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட நெறிமுறைகளை வெளியில் எடுக்க இயலாது. அவருடைய அன்றைய அரசியல் சார்ந்த கொள்கைகள் தற்போதைய உலகில் நடைமுறையில் இருக்கும் அரசியல் கொள்கைகளை விட மிகவும் முற்போக்கானவை.

சிறையில் இருந்து அவர் வெளிவந்த பின்பு அரசியல் மற்றும் போராட்டங்களில் இருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் சந்தர்நாகோர் பகுதியில் தலைமறைவானார். பின்னர் பிரெஞ்ச் இந்திய இடமான பாண்டிச் சேரியில் தஞ்சமடைந்தார். அங்கு அவர் தன்னை ஆன்மிகத்திலும் தத்துவத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு அவர் நிறைய புத்தகங்களை எழுதினார். பகவத் கீதை மீதான கட்டுரைகள், யோகக் கலைகள், மற்றும் வேதங்களின் ரகசியகள் ஆகிய தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

அரசியல் நடவடிகைகளில் இருந்து வெளியே வந்தாலும் புதுச்சேரியில் அவரின் அரசியல் சார்ந்த எழுத்துகளை தவிர்க்க முடியவில்லை. முகலாயர்களின் ஆட்சி பற்றி தற்போது இருக்கும் ஆட்சியாளர்களின் இந்துத்துவ கருத்திற்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தை முன்வைத்தார் அரவிந்தர்.

Aravindan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment