Advertisment

பாத்துக்கங்க மக்களே... இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பில்ல... கைவிரித்த ஐ.ஆர்.சி.டி.சி!

ஐஆர்சிடிசி ஒரு போதும் உங்கள் தனிப்பட்ட வங்கி குறித்தான தகவல்களை எந்த காரணத்துக்காகவும் கேட்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாத்துக்கங்க மக்களே... இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பில்ல... கைவிரித்த ஐ.ஆர்.சி.டி.சி!

Beware of cyber fraud warns IRCTC : நம்பவைக்கின்ற விதமாக அல்லது எவ்வளவு கவர்ச்சிகரமானதாக அந்த கைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தனிப்பட்ட ஆர்வத்தில் அவர்களுடைய ரகசிய தகவல்களான வங்கி கணக்கு எண், ஏடிஎம் அட்டை பின் (PIN) எண், TPIN, CVV no. மற்றும் UPI ஆகியவற்றை கைபேசி, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கக் கூடாது.

Advertisment

ஐஆர்சிடிசி (IRCTC) ஒருபோதும் பணத்தை திரும்ப செலுத்தவோ அல்லது TDR அல்லது வேறு ஏதாவது பயன்பாட்டுக்கோ கைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தனது வாடிக்கையளர்களிடம் அவர்களின் பாதுகாப்பான தகவல்களான Username, கடவுச்சொல், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), Card/PIN/CVV எண், UPI தகவல்கள் ஆகியவற்றை கேட்பதில்லை.

மேலும் படிக்க : இதெல்லாம் ”பாவம் மை சன்”… ஐ.ஆர்.சி.டி.சி-யை திட்டித் தீர்க்கும் பயணிகள்!

இ-பயணச் சீட்டு ரத்து செய்து பணம் திரும்ப செலுத்தும் நடைமுறை முழுவதும் தானியங்கி பரிவர்த்தனை முறையில் நடைபெறுவது. பணம் திரும்ப கொடுக்கும் நடைமுறையில் மனித தலையீடே தேவைப்படாது. ரத்து செய்யப்பட்ட பயணசீட்டின் கட்டணம் தானியங்கி முறையில் வாடிக்கையாளர் எந்த வங்கி கணக்கிலிருந்து பயணச் சீட்டை முன்பதிவு செய்தாரோ அதே வங்கி கணக்கில், சாதாரணமாக ஒரு வார காலத்திற்குள் திரும்ப செலுத்தப்படும்.

பயனர்களுக்கு யார் பெயரில் தொலைபேசி அழைப்பு வந்தாலும் அவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு தொடர்புடைய தகவல்களை எந்த முறையிலும் பகிராமல் இருக்கவேண்டும். மோசடி செய்பவர்கள் அதை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க, பயனர்கள் தங்களுடைய பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்தல் தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பகிராமல் இருக்கவேண்டும்.

ஈரோடுக்கு ஒரு டிக்கெட் பார்சல்… சைவ, அசைவ உணவுகளுடன் ரெடியாக காத்திருக்கும் ரயில் நிலையம்!

ஐஆர்சிடிசி தொடர்புடைய தகவல்களுக்காக கூகுள் மற்றும் அது போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தும் போது பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தேடும் போது பல போலி இணையதளங்கள் பயனர்களின் தகவல்களை திருடக்கூடும்.

ஐஆர்சிடிசி யின் இதர சேவைகளான உணவு (e-Catering), விமானம் மற்றும் சுற்றுலா போன்றவற்றுக்கான பணம் திரும்ப அளிக்கும் நடைமுறையும் முழுவதும் தானியங்கி தான். இதிலும் எங்கும் மனித தலையீடு இருக்காது. ஐஆர்சிடிசி ஒரு போதும் உங்கள் தனிப்பட்ட வங்கி குறித்தான தகவல்களை எந்த காரணத்துக்காகவும் கேட்காது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்வது மோசடிக்கு வழிவகுக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment