'ஹம்ரோ சிக்கிம்' - புதிய கட்சி தொடங்கிய பைசுங் பூட்டியா!

'ஹம்ரோ சிக்கிம்' என்ற பெயரில் புதிய கட்சியை பைசுங் பூட்டியா தொடங்கினார்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா. உலக அரங்கில், சிறந்த இந்திய கால்பந்து வீரர் என போற்றப்பட்டவர் இவர். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பூட்டியா, 2014 பாராளுமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து, திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் பூட்டியா விலகினார். இந்நிலையில், ‘ஹம்ரோ சிக்கிம்’ என்ற பெயரில் புதிய கட்சியை அவர் டெல்லியில் இன்று தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த கட்சி சிக்கிம் மக்களுக்கானது. அதிகாரம் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்” என கட்சி அறிவிப்பு நிகழ்ச்சியில் கூறினார். விரைவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close